ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை வெளியேறுமாறு
அச்சுறுத்திய தேரர்கள் உற்பட சிலருக்கு
நீதிமன்ற அழைப்பாணை.
கல்கிஸை பொலிஸ் பிரிவில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹின்ய முஸ்லிம்
அகதிகளை வெளியேறுமாறு அச்சுறுத்தி அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்களை முன்னிலையாகுமாறு
கல்கிஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட சிலருக்கு எதிராக பொலிஸாரினால் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை முன்னிலையாகுமாறு
கல்கிஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின்
பாதுகாப்பின் கீழ் கல்கிஸை பொலிஸ் பிரிவில் 30 ரோஹின்யா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்ட அக்மீமன தயாரத்ன
தேரர் தலைமையிலான குழுவினர் அவர்களை வெளியேறுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரோஹின்யா முஸ்லிம்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைய முற்பட்ட
பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் அங்கு இருந்த சில பொருட்களையும் சேதப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து ஸ்தலத்திற்கு சென்ற கல்கிஸை பொலிஸார் பிக்குகள்
குழுவிடம் இருந்து ரோஹின்யா முஸ்லிம்களை பாதுகாப்பாக வெளியேற்றி பூசா மகாமில் தங்கவைத்துள்ளனர்.
இந்த நிலையிலே ரோஹின்யா முஸ்லிம் அகதிகளை வெளியேறுமாறு அச்சுறுத்தி
அடாவடித்தனத்தில் ஈடுபட்ட அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட சிலரை எதிர்வரும் திங்கட்கிழமை முன்னிலையாகுமாறு கல்கிஸை
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment