வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியில்
போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக
இலங்கை
தாய்நாட்டின் சுபீட்சத்தையும் நல்லிணக்கத்தையும்
ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டரை
வருட காலப்பகுதியில்
அரசாங்கம் மேற்கொண்ட
அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் நாட்டின்
உண்மையான நிலவரங்களுக்கு
மாறாக போலிப்
பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய
அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு நேற்று
(23) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்
இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத்
தெரிவித்தார்.
நியுயோர்க்
நகரத்தில் (Queens Temple) குயின்ஸ் பௌத்த
விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு
வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், இம் மக்களுடனான
சந்திப்பில் இணைந்துகொண்டார்.
மோதலுக்கு
பின் அரசாங்கம்
மேற்கொள்ளவேண்டிய பணிகளை உரியமுறையில் நிறைவேற்றாத காரணத்தினால்
தற்போதைய அரசாங்கம்
பல்வேறு பிரச்சினைகளுக்கு
முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, 2015
ஜனவரி 08ஆம்
திகதி தம்மை
ஜனாதிபதி பதவிக்கு
தெரிவுசெய்து நாட்டு மக்கள் தன்மீது வைத்த
எதிர்பார்ப்புகளை படிப்படியாக நிறைவேற்றி, இன்று அரசாங்கம்
முன்னோக்கி பயணிப்பதாகவும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment