உடலில் கீழ் பகுதிக்குள் மறைத்து வைத்து
தங்கம் கடத்திய நபர் கைது
சட்டவிரோதமாக தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு கிலோ கிராம் எடைகொண்ட தங்கத்தை சந்தேக நபர் தனது உடலில் கீழ் பகுதிக்குள் மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
கொழும்பு - பொரளை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான இந்த நபர், இந்தியாவின் கோயம்புத்தூர் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
4 தங்க கட்டிகள், 3 தங்க துண்டுகள், 6 தங்கச் சங்கிலிகள் மற்றும் வெள்ளி மூலாம் பூசப்பட்ட இரண்டு தங்க தகடுகளை சந்தேக நபர் தனது ஆசன வாயில் மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் எடை
904.77 கிராம் எனவும், இதன் பெறுமதி 45 லட்சத்து 23 ஆயிரத்து 850 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment