நள்ளிரவுடன் கலைகிறது கிழக்கு மாகாணசபை
ஆளுனரின் கையில் நிர்வாகம்
கிழக்கு மாகாணசபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில், மாகாணசபையின் நிர்வாகத்தை ஆளுனர் ரோகித போகொல்லாகம நாளை கையில் எடுத்துக் கொள்ளவுள்ளார்.
2012ஆம் அண்டு செப்டெம்பர்
மாதம் நடந்த தேர்தலை அடுத்து, அதே மாதம் 30ஆம் திகதி ஆரம்பித்த கிழக்கு மாகாணசபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இன்று நள்ளிரவுடன் கிழக்கு மாகாணசபை தானாகவே கலைந்து விடும் நிலையில், அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய சபை தெரிவு செய்யப்படும் வரையில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகமவே நிர்வாகத்தை நடத்துவார்.
இன்றுடன் கலையும்- 37 ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி 1ஆசனத்தையும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment