அப்பாவி அகதிகள் மீது தாக்குதல் நடத்துவது
கீழ்த்தரமான செயல்
அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பின் கீழ் இலங்கையில் தங்கியிருக்கும் மியன்மார் ரொஹிங்கியா அகதிள் மீது காவிகள் சிலர் தாக்கிய சம்பவத்தை ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையிலும் இலங்கையின் பௌத்தன் என்ற வகையிலும் வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அப்பாவி அகதிகள் மீது தாக்குதல் நடத்துவது கீழ்த்தரமான செயல் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மியன்மாரை சேர்ந்த அகதிகள் 2008 ஆம் ஆண்டு 2012 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வந்தனர். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பின் கீழ் இருந்த அவர்களை அமெரிக்காவும் கனடாவும் அகதிகளாக ஏற்றுக்கொண்டதும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் வந்துள்ள இந்த அகதிகளும் சில மாதங்களில் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment