வங்காளதேசத்துக்கு தஞ்சமடைய சென்றபோது
ஆற்றில் படகுகள் கவிழ்ந்தன
60 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலி
கலவர
பூமியாக மாறிவிட்ட
மியான்மரில் இருந்து வங்காள தேசத்துக்கு தஞ்சமடைய
ரோஹிங்கியா இனத்தவர்கள் சென்ற படகு ஆற்றில்
கவிழ்ந்த விபத்தில்
60 பேர் உயிரிழந்தனர்.
ராணுவத்தினரின்
தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள்
வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற
வண்ணம் உள்ளனர்.
இரு நாடுகளுக்கும்
இடையிலான கடல்
மற்றும் ஆற்றின்
வழியாக படகில்
செல்லும் பலர்
விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
மியான்மரில்
ராணுவ நடவடிக்கைகள்
தொடங்கியதன் விளைவாக அண்டைநாடான வங்கதேசத்தில் சுமார்
5 லட்சம் ரோஹிங்கியா
மக்கள் அகதிகளாக
தஞ்சம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து உயிருக்கு
ஆபத்தான நிலையில்
படகுகளின் மூலம்
செல்பவர்களின் எண்ணிகை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில்,
வங்காள தேசத்துக்கு
தஞ்சமடைய ரோஹிங்கியா
இனத்தவர்கள் சென்ற இரு படகுகள் நேற்று முன் தினம் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலர்
உயிரிழந்தனர். அவர்களில் 23 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன 40-க்கும்
அதிகமான பிரேதங்களை
மீட்கும் முயற்சியில்
நீச்சல் வீரர்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வங்காளதேசம் நாட்டு
ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment