கத்தி, அரிவாளோடு ஆயுத பூஜை கொண்டாடிய
தமிழகத்திலுள்ள இந்து மகா சபை மாநிலத்
தலைவர் த.பாலசுப்பிரமணியன் இல்லத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில்
கத்தி, வேல்கம்பு,
அருவாள் போன்ற
ஆயுதங்களை வைத்து
பூஜை செய்துள்ளது
பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
கடந்த
ஆண்டு இந்து
மக்கள் கட்சித்
தலைவர் அர்ஜூன்
சம்பத் ஆயுத
பூஜை அன்று
துப்பாக்கி அருவாள், கத்தி போன்ற ஆயுதங்களுக்கு
பூஜை செய்த
போட்டோ ஃபேஸ்புக்கில்
வைரலாக அவர்
மீது வழக்கு
தொடுக்கப்பட்டது.
இந்து
மகா சபா
முகநூல் பக்கத்தில்,
த.பாலசுப்பிரமணியன்
ஆயுத பூஜை
கொண்டாடிய புகைப்படங்கள்
பதிவேற்றப்பட்டுள்ளன. அந்த போட்டோக்களில்
கத்தி, அரிவாள்,
வாள் போன்றவைகளை
வைத்து பாலசுப்பிரமணியன்
வணங்குகிறார்.
ஆயுத
பூஜை என்பது
தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்கு பயன்படக்கூடிய கருவிகளை
சுத்தம் செய்து
வழிபாடு நடத்தும்
ஒரு பண்டிகையாக
இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால்
ஆயுதங்களை வைத்து
த.பாலசுப்பிரமணியன்
வழிபாடு நடத்தியுள்ளதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே த.பாலசுப்பிரமணியனுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
கொடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை
முன்னிட்டு அதிக விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை
செய்பவரும் இவர் தான். பாஜக மற்றும்
இஸ்லாம் மதத்தினரை கடுமையாக விமர்சனம்
செய்பவர்.
குமரி
மாவட்டத்தில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வரும்
த.பாலசுப்பிரமணியன்
ஆயுத பூஜையின்
போது அரிவாள்
,வேல்கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து
பூஜை நடத்தியதால்
அவர் மீது
வழக்கு பாய
வாய்ப்பு இருக்கிறது எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.