வான்வழி தாக்குதலில்
சிரியாவின்
வடமேற்கு பகுதியில்
நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நான்கு குழந்தைகள்
உட்பட 28 பொதுமக்கள்
உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு
அமைப்பு தெரிவித்துள்ளது.
துருக்கி
எல்லையையொட்டிய சிரியாவின் இத்லிப் மாகாணம் தீவிரவாத
கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால்
இங்கு சிரிய
அரசு படைகளும்,
ரஷிய படைகளும்
போர் விமானங்கள்
முலம் தொடர்
தாக்குதல் நடத்தி
வருகின்றனர்.
இந்நிலையில்
இப்பகுதியில் உள்ள அமனாஸ் நகரில் கடந்த
வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலுல்
நான்கு குழந்தைகள்
உட்பட 28 பொதுமக்கள்
உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள்
கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை
சிரியா அரசுப்படை
நடத்தியதா அல்லது
ரஷிய படை
நடத்தியதா என்பது
தெரியவில்லை.
இப்பகுதியில்
பொதுமக்கள் பாதுகாப்புக்காக சமாதான வளையம் அமைப்பதற்கு
ரஷிய அதிபரும்,
துருக்கி பிரதமரும்
கடந்த வியாழக்கிழமை
ஒப்புக்கொண்டனர். எனினும், இந்த தாக்குதலினால் அந்த
திட்டத்தை நிறைவேற்றுவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment