இரண்டு நீதிபதிகள் ஒரே தீர்ப்பு
நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு ஆரம்பம்
புங்குடுதீவு
மாணவி வித்தியா
கொலை வழக்கில்,
தீர்ப்பாயத்தின் தலைவரான, நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்
தனது தீர்ப்பை
வாசித்து முடித்துள்ள
நிலையில், தீர்ப்பாயத்தின்
மற்றொரு நீதிபதியான,
மாணிக்கவாசகர் இளஞ்செயழியன் தனது தீர்ப்பை படித்து
வருகிறார்.
தீர்ப்பாயத்தின்
தலைவரான, நீதிபதி
பாலேந்திரன் சசிமகேந்திரன் தனது தீர்ப்பில்,
2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளான
பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன்
சந்திரகாசன், சிவதேவன் துசாந்தன் ஆகியோர், கூட்டு
வன்புணர்வு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்
என்றும்,
2ஆம்,
3ஆம், 4ஆம்,
5ஆம், 6ஆம்,
8ஆம், 9ஆம்
எதிரிகளான பூபாலசிங்கம்
ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன்,
தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன்
கோகிலன், மகாலிங்கம்
சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றமொன்றை மேற்கொள்வதற்கான
சதி மேற்கொண்ட
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும்
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய,
2ஆம், 3ஆம்,
4ஆம், 5ஆம்,
6ஆம், 8ஆம்,
9ஆம் எதிரிகள்
குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பளித்துள்ளார்.
மூன்று
நீதிபதிகளைக் கொண்ட இந்த தீர்ப்பாயத்தின் மற்றொரு
உறுப்பினரான நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இடம்பெற்றுள்ளார்.
அவர்
தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின்
தீர்ப்பையே தாமும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே
மூன்றாவது நீதிபதியான
இளஞ்செழியன் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார். 345 பக்கங்களைக் கொண்ட அவரது தீர்ப்பின்
சுருக்கம், ஏனைய நீதிபதிகளின் தீர்ப்புடன் இணங்குவதாக
இருந்தாலும், வேறுபட்ட விளக்கங்கள், காரணங்களையும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும்,
தீர்ப்பாயத்தின் பெரும்பான்மையினரான இரண்டு நீதிபதிகள், கூட்டு
வன்புணர்வுப் படுகொலையையும், சாட்சியங்களின்
உண்மைத் தன்மையையும்
உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment