அரசியல்வாதிகளின் விடயத்தில்

SLTJ யின் செயற்பாட்டை மக்கள் விரும்புகின்றனர்


இஸ்லாத்துக்குள் அரசியல் என்பது ஒரு பகுதியாகும். இன்று அரசியல் என்பதுசாக்கடைஎன வர்ணிக்குமளவு ஒரு இழி நிலையில் உள்ளது. இலங்கை நாடானது அரசியலமைப்பு மாற்ற நகர்வில் ஒரு மிக முக்கியமான காலத்தில் உள்ளது. இதில் நடைபெறும் சிறிய தவறுக்கும் பாரிய விலை கொடுக்க நேரிலாம் என்பதால் இதில் அனைவரும்  மிகக் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.

எமது அரசியல் வாதிகள்மாகாண சபை தேர்தல் முறை மாற்றம் முஸ்லிம்களை அதிகம் பாதிக்கும் எனத் தெரிந்தும் எதனையும் கருத்தில் கொள்ளாது ஆதரவு தெரிவித்துள்ளனர். இது மாத்திரமல்ல பல தடவைகள் தவறிளைத்துள்ளனர். இனியும் இவர்களை நம்ப முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இலங்கை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயமாகவும் கூறலாம். இவர்களை கட்டுப்படுத்தும் வகையிலான ஒரு அமைப்பின் தேவை உள்ளது. இது அரசியலில் நேரடி இலாபம் பெறாத மார்க்க அமைப்பாக இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு வழி காட்டுதல் எனும் விடயம் வரும் போது பலரதும் பார்வை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை நோக்கி திரும்பும். அதே போன்று மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தின் போதும் திரும்பியது. இதற்கு முன்பும் பல தடவைகள் திரும்பியது. எச் சந்தர்ப்பத்திலும் எந்தவித சிறு இலாபமும் கிட்டவில்லை. இவ் விடயத்தில் எவ்வாறு அரசியல் வாதிகளின் மீது இலங்கை மக்கள் வெறுப்புக் கொண்டார்களோ அந்தளவு அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் மீதும் வெறுப்பும் பிழையுமுள்ளது. இனி இவர்களையும் நம்ப முடியாது என்ற முடிவுக்கு வரலாம். ஏதும் என்றால் துஆ கேளுங்கள் குனூத் ஓதுங்கள் என பிரச்சனைகளை முடித்து விடுவார்கள். இதனை கூற இவர்களா தேவை? கடந்த காலங்களில் இவர்கள் மறைமுக அரசியல் இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.

அண்மைக் காலமாக இது விடயத்தில் SLTJ அமைப்பு மூக்கை நுழைத்து மிகக் கடுமையான தொனியில் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த விமர்சனம் தொடர வேண்டும். அவர் செய்யும் சிறு தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். இவர்களின் இச் செயற்பாடு கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் பெரு மதிப்பை பெற்றுள்ளது. விமர்சனங்களோடு  மாத்திரம் நின்று விடாது இவ்விடயத்தில் சிறந்த ஆய்வுகளை வெளிப்படுத்தி மக்களை வழிப் படுத்தும் ஒரு அமைப்பாக அது திகழ வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர்.

SLTJ யினை பொறுத்தமட்டில் இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சாத கொள்கையுடையவர்கள். இது விடயத்தில் அப்படியான ஒரு அமைப்பே பொருத்தமானதாகும். இவர்களை கொள்கைக்காக விமர்சிக்காமல் இது விடயத்தில் உச்சாகப்படுத்துவது காலத்தின் தேவையாகும். இவர்களின் பிரதான அமைப்பயான TNTJ தமிழக அரசியலில் பிரதான வகிபாகம் வகிக்கின்றது. பெரும் பதவிகளை அடைந்துகொள்ளக் கூடிய வாய்ப்புள்ள போதும் அவ் அமைப்பு பதவிகளுக்கு இது வரை அடிபணியவில்லை. அதே விதத்தில் SLTJ அமைப்பும் அரசியலில் தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இனி என்ன? இவர்கள் ஆரம்பித்து விட்டார்கள் அல்லவா? நானும் ரௌடிதான் என சில அமைப்புக்கள் கிளம்பி, இவர்களின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட வரலாம். நாங்கள் செய்கிறோம் ம் என சில அமைப்புக்கள்வைக்கோல் பட்டறை நாயைப்போன்று தானும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடாது தடுக்கலாம்.
துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top