அத்தியாவசியப் பொருட்களின்

விலைகள் குறைப்பு:


அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் திடீரென ஏற்பட்ட அரிசித்தட்டுப்பாட்டினால் சந்தையில் அரிசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. ஜனாதிபதியின் விசேட ஆலோசனைக்கமைய வாழ்க்கைச் செலவுக்கான உப குழு அவரின் தலைமையில் கூடி சந்தையில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனத்தினூடாக நியாயமான விலையில் விற்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள சகல சதொச கிளைகளிலும் ஒரே விலையில் இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்படுமென அவர் அறிவித்ததுடன். அவற்றுக்கான விலைகளையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற் கொண்டே ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை உப குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் சந்தையில் தரமான அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யும் நிறுவனமாக சதொச நிறுவனம் விளங்குவதாகத் தெரிவித்த நிறுவனத்தின் தலைவர் சதொச நிறுவனம் மக்களின் நலன்களை மையமாக்கொண்டே எனறும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது மாத்திரமின்றி ஏனைய வெளியார் கடைகளிலும் சுப்பர் மார்க்கட்டிலும் விற்கப்படும் அனேகமான அத்தியாவசிப் பொருட்களை சதொச நிறுவனம் வெகுவாகக் குறைத்து பின்வரும் விலைகளில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏதிர் வரும் மாதங்களில் பாவனையாளர்களுக்கு மேலும் பல நன்மைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தமக்கு உறுதியளித்துள்ளதாக தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top