முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதாகக் கூறும்
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடமே
கல்கிஸையில் ரோகிங்யோ அகதிகளின் விடயத்தில் ஏன் மெளனம்?
- மக்கள் கேள்வி
இன்று
காலை கல்கிஸையில்
ஐ.நாவின்
மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ
அகதிகளை அங்கிருந்து
வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும்
மோசமான முறையில்
தூஷித்து அடாவடித்தனம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது
விடயத்தில்கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும்,
இந்த அவலைகளின்
பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும் சட்டமும்,
ஒழுங்கும் அமைச்சர்
சாகல ரட்நாயக்கவிடம்
அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்
என செய்திகள்
தெரிவிக்கின்றன.
அமைச்சர்
சாகல ரட்நாயக்கவை
இன்று (26.09.2017) காலை அமைச்சரவை
கூட்டம் முடிவடைந்த
பின்னர் சந்தித்துப்
பேசிய அமைச்சர்
ரிஷாட் பதியுதீன்,
கல்கிஸையில் இடம்பெற்ற இந்த மிலேச்சத்தனமான சம்பவங்களை
விபரித்ததுடன், அது தொடர்பிலான காணொளியையும் அவரிடம்
காட்டியதாகவும் மேலும் செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.
ஆனால்,
முஸ்லிம் சமுதாயத்தின்
அவல நிலைக்கு
குரல் கொடுப்போம்
என மக்களிடம்
வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
உட்பட அக்கட்சியின்
உயர்பீடம் ஏன்
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கவலையான நிலைக்கு
உடனடியாக குரல்
கொடுக்க முடியவில்லை
என மக்கள்
கேள்வி எழுப்புகின்றனர்.
பெண்களும், குழந்தைகளும் உள்ள இந்த அகதிகளைப்பார்த்து
பயங்கரவாதிகள் என்று கூறியிருப்பதுடன் முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம்
செய்துள்ளார்கள்.
கடந்த
ஆறு மாதங்களுக்கு
முன்னர் பருத்தித்துறை
கடல் வழியாக
படகுகளில் சென்றுகொண்டிருந்த
மியன்மார் அகதிகளை
இலங்கைக் கடற்படை
கைதுசெய்து யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸில் ஒப்படைத்தது. பின்னர்
அவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஐ.நா அதிகாரிகளின்
பராமரிப்பில் கல்கிஸைக்கு கொண்டுவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தவர்களே இவர்கள். இதுபற்றி
எதுவுமே தெரியாதவர்கள் போன்று பொலிஸாரும் நடந்து கொண்டதாக அறிவிக்கப்படுகின்றது.
இவர்கள் ஐ.நா அதிகாரிகளையும்
அச்சுறுத்தியிருக்கின்றனர். ஐ.நாவின் மனித
உரிமை சாசனத்தைக்கூட
புறக்கணித்து, தான்தோன்றித்தனமாக இவர்கள் செயற்பட்டமை குறித்து முஸ்லிம்
காங்கிரஸ் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஏன் இப்படியான விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் மெளனித்துப்போய் இருக்கின்றது என மக்கள்
வினவுகின்றனர்.,
0 comments:
Post a Comment