சவூதி அரேபியாவில் இனி பெண்களுக்கு வாகனம்
ஓட்டுவதற்கு
தடை இல்லை: மன்னர் அதிரடி அறிவிப்பு
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை இல்லை என்று கூறி அந்நாட்டு மன்னர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு உலகநாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில் தற்போது சவூதி மன்னர் சல்மான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சவூதியில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட இனி தடையில்லை எனவும், பெண்களுக்கு வாகனம் ஓட்ட இனி லைசன்ஸ் வழங்கப்படும் என்றும் இது வரும் 2018 ம் ஆண்டு ஜுன் மாதம் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை சவூதியில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை என்ற எந்த சட்டமும் இல்லை எனவும், இஸ்லாமிய மார்க்கத்திலும் பெண்கள் வாகனம் ஓட்ட தடை என எந்த இடத்திலும் கூறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment