20வது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம் ஏன் ஆதரவாக வாக்களித்தார்?
மக்களுக்கு தெளிவுபடுத்தாமல் இருப்பது ஏன்?
20வது திருத்தச்சட்டத்துக்கு ஏன் ஆதரவாக வாக்களித்தோம். அப்படி ஆதரவாக வாக்களிப்பதற்கான சூழ் நிலை எப்படி
ஏற்பட்டது? அந்த இக்கட்டான சூழ் நிலையை விளக்கி அமைச்சர் ரிசாட் பதியுதீன் கவலையுடன் மக்களுக்கு பொது
மேடைகளிலும் தொலைக்காட்சி விவாதத்திலும் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறித்த திருத்தச் சட்டத்துக்கு
ஆதரவாக வாக்களிக்க ஏன் முன் வந்தார் ஏன் ஆதரவாக வாக்களித்தார் என்ற விளக்கத்தை இதுவரையும் மக்களுக்கு, தெரியப்படுத்தாமல் இருப்பது ஏன் என சமூகத்தில் உள்ள நடுநிலை புத்திஜீவிகள்
கேள்வி எழுப்புகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். .ஹரீஸ் அவர்களும் 20வது திருத்தச்சட்டத்துக்கு நாங்கள் வாக்களித்து
சமூகத்துக்கு துரோகம் செய்துவிட்டோம் என வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில்
பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இது குறித்து
மக்களுக்கு எந்த ஒரு விளக்கமும் தெரிவிக்காமல்
மெளனமாக இருப்பதன் மர்மம் என்ன? எனவும் முஸ்லிம் மக்கள் வினவுகின்றனர்.
காலையில் கொண்டுவந்த சட்டத்ததை அவசர அவசரமாக மாலையில் நிறைவேற்ற அரசாங்கம் அவதிப்பட்டபோது, அதன் பாரதூரம் அறிந்து அமைச்சர் றிஷாட் தலைமையிலான
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு
எதிராகக் காணப்படும் இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்து அடம்பிடித்ததாகவும்
இந் நிலையில் கடைசி நேரத்தில் முஸ்லிம் சமூகத்தைச்
சேர்ந்த யாரோ ஒரு சமூகத்துரோகி அமைச்சர் றிஷாட் பதீயுதீனுக்கு எதிராக பிரதமரிடம் டீல் நடக்கிறது பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஒரு கதையைப் பரப்பி அரசாங்க
எம்.பிக்களை அமைச்சர் றிஷாட்டுக்கு எதிராக திருப்பி விட்டதாகவும்
முன்னாள் அமைச்சர் பசீல் ராஜபக்கஸவுடன் சேர்ந்து அரசாங்கத்தை
கவிழ்க்க பார்க்கின்றார் என்று கதை பரப்பப்பட்டதாகவும் அவரைச் சுற்றி நூற்றுக்கணக்கான
அரச தரப்பு எம்.பிக்கள் கூடிவிட்டதாகவும் அமைச்சர் றிஷாட்டைப்
பார்த்து மஹிந்தவின் செல்லப்பிள்ளை, பஷில் ரஜபக்ஸவின் நெருங்கிய நண்பன் என்று சொல்லி
வந்தவர்களுக்கு சமூகத்துரோகி ஒருவரால் அமைச்சர் றிஷாட்
பதீயுதீனுக்கு எதிராக பிரதமரிடம் டீல் நடக்கிறது பார்த்துக்கொள்ளுங்கள் என்ற அந்த பிழையான அள்ளிவைப்பு சரியாகிவிடும் என்ற காரணத்தாலும்
வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
அது மாத்திரமல்லாமல், முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரித்து
வாக்களிக்க முற்பட்டுவிட்டதால் 152 எம்பிக்களின் ஆதரவு அரசாங்கத்துக்கு கிடைத்துவிட்ட
நிலையில் நாம் வாக்களிக்காவிட்டால் பிரச்சினை வேறு திசையில் மாறக்கூடிய நிலை அவ்விடத்தில்
ஏற்பட்டதாலும் தாம் வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக அமைச்சர் றிஷாட் தன் பக்க நியாயத்தை
மக்களுக்கு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
தான் பிழை செய்ய வேண்டிய நிலை எந்த சந்தர்ப்பத்தில் எப்படி உருவானது.
அந்தப் பிழையை நான் ஏன் செய்தேன் என்பதை. இஸ்லாமிய உணர்வுள்ள ஒரு உரோசம் உள்ள முஸ்லிம் என்ற அடிப்படையில் அமைச்சர்
றிஷாட் பதியுதீன் மக்கள் மத்தியில் கவலையுடன்
அவர் பக்க நியாயத்தை தெளிவுபடுத்தி வருகின்றார்.
ஆனால் கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் அதிக எண்ணிக்கையான முஸ்லிம்
வாக்குகளைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர்
றீஷாட் பதியுதீனுக்கு முன்பதாக 20வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு
ஏன் விரும்பியிருந்தார்? பின்னர் அவரும் அவர் கட்சியினரும் என்ன காரணத்திற்காக
அச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்? என்ற விளக்கம் இதுவரை மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை.
20வது திருத்தச்சட்டத்துக்கு ஏன் வாக்களிக்க வேண்டியிருந்தது
என்ற விளக்கத்தை அமைச்சர் றீஷாட் பதியுதீன் போன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமின் விளக்கத்தையும்
மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment