இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்

உருவப்படத்துடன் யாழ். முழுவதும் சுவரொட்டிகள்

குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளே என சுட்டிக்காட்டி யாழ். முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சுவரொட்டிகளால் பரபரப்பான சூழல் அங்கு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வித்தியா படுகொலை தொடர்பான வழக்கிற்கு நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 7 பேருக்கும் மரணதண்டனையும் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பாயம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில் இன்றைய தினம் யாழின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன், அந்த சுவரொட்டிகளில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் படமும் அச்சிடப்பட்டுள்ளது.
அத்துடன், அதில் நாளைய தினம் (30.09.2017) பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சுவரொட்டிகளின் கீழ் தீவக மக்கள் மற்றும் யாழ். பெண்கள் அமைப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் விடயத்திழல் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக நீதிபதி இளஞ்செழியன் தனது விமர்சனத்தைத் தெரிவித்து கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top