அரசின் பொறுப்பற்ற செயற்பாடே

அப்பாவிகளை தீவிரவாதிகளாக

சித்தரிக்க வைத்துள்ளது.


இனவாதிகள் மியன்மார் முஸ்லிம்களை விரட்டுவதாக நினைத்து இலங்கை நாட்டுக்கு சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
நேற்று செவ்வாய் கிழமை 26.09.2017ம் திகதி கல்கிசை பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகள் மீது இனவாதிகளின் அட்டூழியங்கள் நடந்தேறியுள்ளன.இந்த மியன்மார் அகதிகளுக்கு இலங்கை அரசு தங்க இடம்கொடுத்ததே தவிர மற்ற அனைத்தையும் . நா அமைப்பே முன்னெடுத்து வந்தது.
இலங்கை நாடானது சர்வதேச ரீதியில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரமே இவர்களை தங்க வைத்திருந்தது. இவர்கள் இங்குள்ள விடயம் மற்றும் இவர்கள் எவ்வாறானவர்கள் என்பதெல்லாம் .நா சபை வரை தெரியும். இவர்களை இங்குள்ள இனவாதிகள் அச்சுறுத்தியுள்ளனர்.
இவர்களின் அச்சுறுத்தலின் மூலம் இலங்கை சர்வதேச ரீதியில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை மீறியுள்ளது. சர்வதேச சட்டங்களை மதிக்கும் பண்பு இலங்கை மக்களிடத்தில் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இதன் மூலம் இவ்வாட்சியின் மீது சர்வதேசம் கொண்டுள்ள சிறு நம்பிக்கையும் இல்லாது போகலாம். இலங்கை நாடானது யுத்த குற்றச் சாட்டுக்கள் உட்பட பல விடயங்களில் அகப்பட்டிருப்பதால் அவற்றிலிருந்து தப்பிக்க, சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற வேண்டிய தேவையும் உள்ளது.
இவர்கள் இங்கிருக்கும் விடயம் அரசுக்கு நன்றாகவே தெரியும்.சட்ட ரீதியான அனுமதிகளுடனே அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள்.இனவாதிகளுக்கு பயந்துகொண்டு அரசாங்கமும் அமைச்சர்கள் சிலரும் ரோஹிங்யா அகதிகள் நாட்டில் நா கண்காணிப்பில் தங்கவைக்கப்பட்டிருப்பதை பொதுமக்களுக்கு கூறாமல் மறைந்தார்கள்.
முன்னதாக முறையாக இந்த விடயத்தை எடுத்து கூறி இருந்தால் இந்த விடயம் இந்த அளவு பூதாகரமாகியிருக்காது.
அது மட்டுமல்லாமல் இலங்கையில் எந்த இரு ரோஹிங்யா அகதிகளும் இல்லை என வெளிநாட்டு பிரதி அமைச்சர் கூறிவிட்டு தற்பொது அதனை மறுத்தாலும் சிங்கள மக்கள் நம்பவும் மாட்டார்கள்.முஸ்லிம் அமைச்சர்களே இவர்களை இங்கு கொண்டு வந்து குடியேற்றியுள்ளதாக கூறிய கதைகளையும் உண்மைப்படுத்திவிடுவார்கள்.
அரசாங்கம் உண்மையை மறைத்தால் தான் இந்த விடயம் பூதாகரமான பிரச்சினையாகியுள்ளது.
இனவாதிகளின் இச் செயற்பாடானது சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயரை கெடுப்பதோடு இலங்கையை ஆபத்தான திசை நோக்கியும் திருப்பவல்லது என்பதில் ஐயமில்லை.
இந்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற சிந்தனையே அதனை பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.

அஹமட்-

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top