எமது குழந்தைகளுக்கு எமது நாடு, சாதி மற்றும்

இனம் ஆகியவற்றை பாது காக்கக் கூடிய விதத்தில்

வழி காட்டுதல் வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ


நாட்டின் தேசிய சொத்துக்களை ஆட்சியாளர்கள் விற்பனை செய்து வருவதால் எமது எதிர்கால சந்ததிகளாகிய சிறுவர்கள் பல்வேறு சுமைகளை தாங்க வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினத்தினை முன் னிட்டு தங்காலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது மேலும் தெரிவித்துள்ளதாவது,
எமது நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதும் 99 வருட குத்தகைக்கு விடுவதும் இரண்டும் ஒன்றே.
எமது நாட்டின் வளங்களை எமது எதிர்கால சந்ததிகளாகிய சிறுவர்களுக்காகவே நாம் பாதுகாக்க வேண்டும். நம்மில் யாரும் இரு நூறு வருடங்கள் வாழ்வதில்லை.
இன்று அல்லது நாளை பிறக்கவிருக்கும் குழந்தைகளும் இருநூறு வருடங்கள் வாழ்வதில்லை. இதனால் எமது வளங் களை நாம் பாதுகாக்க வேண்டும்.
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக இதைவிடவும் நாம் கூடுதல் கரிசணை செலுத்த வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் கவனத்தினை செலுத்த வேண்டும்.
உலக சிறுவர் தினம் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ளது. சிறுவர்களுக்காகாக இவ்வாரான நிகழ்வுகள் நடாத்தப்படுவது பாராட்டத்தக்கது.
குறித்த திகதியை விடவும் முன்னதாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் எமது நாட்டின் வளங்கள். இவர்கள் நேர்வழி சென்றால் தான் எமக்கு எமக்கு எமது எதிர்காலம், எமது நாடு, சாதி மற்றும் இனம் ஆகியவற்றை பாதுகாக்கக் கூடிய விதத்தில் வழி காட்டுதல் வேண்டும்.
இவர்களை கல்வி அறிவுள்ளவர்களாக மாத்திரமன்றி நாட்டிற்கு அர்ப்பணிப்பு மற்றும் சேவை செய்யக் கூடியவர்களாகவும் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.
 எமது குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும். எமது பாசாலைகளில் ஆரம்பத்தில் ஆரம்பத்தில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் இருக்கவில்லை. தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞானம் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்த நிலைமையினை நாம் மாற்றியமைத்து சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள பாடசாலைகளிலும் விஞ்ஞான ஆய்வு கூடங்களை நிர்மாணித்தோம்.

இதனூடாக சகல மாவட்டங்களிலுமிருந்தும் கூடுதலான மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top