சுங்கப் பணிப்பாளராக
மட்டக்களப்பு அரச அதிபர் சார்ள்ஸ் நியமனம்
சுங்கத்
திணைக்களப் பணிப்பாளர் சூலானந்த பெரேரா, அந்தப்
பதவியில் இருந்து
நீக்கப்பட்டு, புதிய பணிப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட
அரசாங்க அதிபர்
பி.எம்.எஸ்.சார்ள்ஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சர்
மங்கள சமரவீரவின்
பரிந்துரைக்கு அமைய, உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில், அமைச்சரவையினால்,
இந்த நியமனம்
வழங்கப்பட்டுள்ளது.
சுங்கத்
திணைக்களப் பணிப்பாளராக இருந்த சூலானந்த பெரேரா,
பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மேலதிகச்
செயலாளராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது
நிர்வாகத்துறையில் 26 ஆண்டுகள் அனுபவம்
பெற்ற பி.எம்.எஸ்.சார்ள்ஸ், இலங்கை நிர்வாக சேவையின்
சிறப்புத் தர
அதிகாரியாவார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இவர், பேராதனை
மற்றும் ரஜரட்டை
பல்கலைக்கழகங்களில், அனர்த்த முகாமைத்துவம்
மற்றும் வர்த்தக
நிர்வாகத் துறைகளில்
இரண்டு முதுகலைப்பட்டங்களையும்
பெற்றுள்ளார்.
இவர்
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராகப் பொறுப்பேற்பதற்கு
முன்னர், வவுனியா
மாவட்ட மேலதிக
அரச அதிபராகவும்,
அரச அதிபராகவும்
பணியாற்றியிருந்தார்.
200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலங்கையின் சுங்கத்திணைக்கள
வரலாற்றில், பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment