பால் தேநீர் ஒன்று 40 ரூபா
தேநீர் 20 ரூபா, அப்பம் 15 ரூபா ; விலை உயர்கிறது
சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் உணவு மற்றும் தேநீருக்கான விலையை அதிகரித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 110 ரூபாவால் நேற்றுமுன்தினம் அதிகரித்துள்ள நிலையில் தாம் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
அதன்படி பால் தேநீர் ஒன்று 40 ரூபாவுக்கும் தேநீரொன்று 20 ரூபாவுக்கும் மதிய உணவு பொதி ஒன்றின் விலை 130 ரூபாவுக்கும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு முடிவெடுத்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment