மின்சாரம் கசிந்ததாக வதந்தி:

மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;

22 பேர் பலி, 60பேர் காயம்

மும்பை ரயில்வே நிலையத்தில் மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியதால் மக்கள் ஓட முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாயினர் 60 பேர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மும்பையில் இன்று காலையில் பெய்த அடைமழையையடுத்து, எல்பின்ஸ்டோனில் அமைந்துள்ளது ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் பெருமளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டது.
இன்று காலை சுமார் 10.50 மணிக்கு குறித்த நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்ததால் அதில் இருந்த மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும் விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, அங்கிருந்த பெருமளவிலான மக்கள் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது, பெரும் பீதி ஏற்பட்டதையடுத்த அங்கு பெரும் சனநெரிசல் ஏற்பட்டது.
அதில் படுகாயமடைந்த பலர் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top