வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில்
நாடுமுழுவதிலும் 31ஆம் திகதிக்கு முன்னர்
100 நடமாடும் வாகனசேவை
பொதுமக்களின்
வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அத்தியாவசியப்
பொருட்களை நிவாரண
விலையில் வழங்குவதற்காக
நடமாடும் வாகனசேவை
நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும்
31ம் திகதிக்கு
முன்னர் 100 நடமாடும் வாகன சேவை நாடு
முழுவதிலும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கு
அமைய நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூட்டுறவு மொத்த
வர்த்தக கூட்டுத்தாபனத்தின்
தலைவர் மொஹமட்
றிஸ்வான் ஹமீட்
தெரிவித்துள்ளார்.
நாடு
முழுவதிலும் உள்ள 700 வாராந்த சந்தைகளை உள்ளடக்கிய
வகையில் முன்னெடுக்கப்படவுள்ள
இந்த திட்டம்
சிவில் படையினருடன்
இணைந்து மேற்கொள்ளப்படுமென்றும்
அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment