ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் 

மயில் சின்னத்திற்கான

நாவிதன் வெளி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்

அமைச்சர் ரிஷாட் ,வேதாந்தி சேகு இஸ்ஸதீன்,

 எம்.ரீ. ஹஸன் அலி!

நாவிதன் வெளி பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் சென்றல் கேம்ப் (மத்திய முகாம்) வட்டார வேட்பாளர்களை  ஆதரித்து நேற்று மாலை 20 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர்களான முன்னாள் ஸ்தாபகத் தவிசாளர் சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸதீன், மற்றும் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் சேகு  இஸ்ஸதீன் தமது கட்சிகளில் இணைந்து கொண்டதாக சில முஸ்லிம் கட்சிகள், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும், போஸ்டர்களை ஒட்டியும் போலிப்  பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கும் நிலையில், சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸதீன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
-ஊடகப்பிரிவு-



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top