அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் மைத்திரி
திங்களன்று நாடாளுமன்றைக் கூட்டுகிறார்

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, நாடாளுமன்றத்தை வரும் வம்பர் 5ஆம் திகதி  திங்கட்கிழமை  கூட்டுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பாக தனக்கு அறிவித்திருக்கிறார் என, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹிந்த ராஜபக் இன்று காலை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஹிந்த ராஜபக்வுக்கு பிரதமர் ஆசனத்தை அளிப்பதற்கும், பிரதமருக்கான சிறப்புரிமைகளை வழங்குவதற்கும், சபாநாயகர் கரு ஜெயசூரிய, இணக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் ஹிந்த ராஜபக், பிரதமர் ஆசனத்தில் அமருவதற்கு தடையாக இருக்கமாட்டேன் என்று சபாநாயகர் தெரிவித்திருப்பதாக, இன்று காலை அவரது செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

நேற்று ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பின் போது இது தொடர்பான  இணக்கம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top