குண்டுத் தாக்குதல்களுடன்
தொடர்புப்பட்ட
பிரதான சந்தேகநபர்கள்
உட்பட
2,389 பேர்
கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சஹ்ரானின் உரைகளுடன் தொடர்புப்பட்ட
51 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
பிரதி அமைச்சர் நளின் பண்டார
உயிர்த்த
ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் உட்பட
இரண்டாயிரத்து 389 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.சஹ்ரான் ஹாசிமின் உரைகள்
தொடர்பில் 51 பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர். பிரதி அமைச்சர்
நளின் பண்டார
இதனை இன்று
பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகால
சட்டத்தை ஒருமாத
காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரனை மீதான
விவாதத்தை ஆரம்பித்து
வைத்து பிரதி
அமைச்சர் உரையாற்றினார்.
உயிர்த்த
ஞாயிறு தினத்தன்று
இடம்பெற்ற தாக்குதல்களுடன்
தொடர்புப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் உட்பட இரண்டாயிரத்து
389 பேர் கைது
செய்யப்பட்டுள்ளார்கள்.
236 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 186 பேர் தடுத்து
வைக்கும் உத்தரவின்
கீழ் விசாரிக்கப்பட்டு
வருகின்றனர். இவர்களுள் மூவர் அவசரகால சட்டத்தின்
கீழும் 186பேர்
பயங்கரவாத தடுப்பு
சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். 425 பேரின் 263 பேருக்கு
வழக்கு பதிவு
செய்யக்கூடியநிலை ஏற்பட்டுள்ளது.
இது
தொடர்பான ஆலோசனைக்கு
சட்டமா அதிபருக்கு
விடயங்கள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. மேலும் 42 பேர்
தொடர்பிலும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது.
7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவில் 79 பேர் இருக்கின்றனர். இவர்கள்
முக்கிய தவறு
இழைத்தவர்கள் ஆவர். டிடிஜ பிரிவில் 29 பேர்
இருக்கின்றனர். சிஜடீ அதாவது கொழும்பு குற்றபுலனாய்வு
பிரிவில் 29பேர் இருக்கின்றனர்.
முக்கிய
சந்தேக நபர்கள்
தகவல்களுக்கு அமைவாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று சஹிரானின்
விரிவுகளை தொடர்புப்பட்ட
59 பேர் இருக்கின்றனர்.
இந்த விடயங்களில்
அரசியல் நடவடிக்கைகளை
பயன்படுத்துபவர்களும் சிலர் இருக்கின்றனர்.
இவர்கள் நாட்டின்
இஸ்திர தன்மையை
சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். என்றும்
பிரதி அமைச்சர்
மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.