அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை
தாக்கல் செய்தார் குருநாகல் டாக்டர் ஷாபி !
கைது
செய்யப்பட்டு தான் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால்,
தனது அடிப்படை
உரிமை மீறப்பட்டுள்ளதாக
கூறி, குருணாகல்
போதனா வைத்தியசாலையின்
டாக்டர் ஷாபி
ஷிஹாப்தீன் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை
உரிமை மீறல்
மனு ஒன்றை
தாக்கல் செய்துள்ளார்.
குருணாகல்
பொலிஸ் நிலையத்தின்
குற்ற விசாரணைப்
பிரிவின் பொறுப்பதிகாரி
பொலிஸ் பரிசோதகர்
புஷ்பலால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதிப்
பொலிஸ் மா
அதிபர் கித்சிறி
ஜயலத், குற்றப்
புலனாய்வு திணைக்களத்தின்
பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி
அபேசேகர, பாதுகாப்பு
அமைச்சின் செயலாளர்
சாந்த கோட்டேகொட
மற்றும் சட்டமா
அதிபர் ஆகியோர்
பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மோசடியான
முறையில் சொத்து
சம்பாதித்துள்ளதாக குற்றம் சுமத்தி,
தன்னை கைது
செய்து, பயங்கரவாத
தடுப்புச் சட்டத்தின்
கீழ் தடுத்து
வைத்திருப்பது சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு குருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன்
தனது மனுவில்
கோரியுள்ளார்.
ஆபதீன்
அசோசியேட்ஸ் சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய
ஜனாதிபதி சட்டத்தரணி
பாயிஸ் முஸ்தபாவுடன்
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா,
ஹாபீஸ் ஃபாரிஸ்,
ஷிபான் மஹ்ருப்,
என். ஜெகதீஸ்வரன்
ஆகிய சட்டத்தரணிகள்
ஊடாக இந்த
மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி
ருஷ்தி ஹபீப்
ஊடாக இந்த
மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
மனு முழு விபரம்,
0 comments:
Post a Comment