அடக்கப்பட்டு
ஒரு மாதத்திற்குப் பின்னர்
முஸ்லிம் மயானத்திலிருந்து மாயமான மையத்!
அதிர்ந்துபோன உறவுகள்!
கலேவல
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
நிக்கவெஹெர, பல்லேவல பகுதியில் உயிரிழந்து அடக்கம்
செய்யப்பட்ட ஒருவருடைய மையத் காணாமல் போயுள்ளது
குறித்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்து
28 நாட்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட ஒருவருடைய மையத்தே இவ்வாறு
காணாமல் போயுள்ளதாக
தெரியவந்துள்ளது.
இந்த
விடயம் தொடர்பில்
கலேவல பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து
மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கலேவல, பல்லேவல
பகுதியில் உள்ள
முஸ்லிம் மயானம்
ஒன்றில் குறித்த மையத்தை தோண்டி எடுத்திருந்த அருகில் மேலும்
இரண்டு குழிகள்
தோண்டப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின்
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது பல்லேவல பகுதியை
சேர்ந்த ஹபீப்
லெப்பே மன்சூர்
எனும் 50 வயதுடைய
நபரின் மையத்தே இவ்வாறு தோண்டப்பட்டு கடத்திச்
செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மையத்தை தேடும்
நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மையத் அடக்கம்
செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்து
200 மீற்றர் தொலைவில் இருந்த முருங்கை பண்ணை
ஒன்றிற்குள் மண்ணால் மூடப்பட்டிருந்தததை
பொலிஸார் கண்டு
பிடித்துள்ளனர்.
உயிரிழந்த
குறித்த நபரை
அடக்கம் செய்ததாகவும்
பின்னர் அந்த
இடத்தில் தோண்டப்பட்டுள்ளதாக
கிடைத்த தகவலை
அடுத்து சோதனை
செய்த போது
ஜனாஸா காணாமல்
போயிருந்ததாகவும் உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் பொலிஸாரிடம்
தெரிவித்துள்ளார்.
குறித்த
சம்பவம் யாரால்
எந்த நோக்கத்திற்காக
செய்யப்பட்டது என இதுவரையில் தெரியவரவில்லை என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் தற்போது குறித்த மயானத்திற்கு பொலிஸ்
பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம்
தொடர்பில் கலேவல
பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment