அரச ஊழியர்களின்  ஆடை பற்றிய 
 புதிய  சுற்றறிக்கை!
சற்று முன்னர் வெளியானது

இலங்கையில் உள்ள அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்றை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி அரச பணியாளர்களாக உள்ள ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் பாலாரும் எவ்வாறான உடையினை அணிந்துகொண்டு கடமைக்குச் சமூகமளிக்கவேண்டும் என்பது தொடர்பிலும் அரச நிறுவனத்திற்கு சேவையைப் பெற வருபவர்கள் எவ்வாறான உடையினை அணிந்துகொண்டு வரவேண்டுமென்பது பற்றியும் சுற்று நிருபத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

ஏற்கனவே அண்மையில் வெளிவந்த ஆடை தொடர்பான சுற்றறிக்கை சர்ச்சைக்குள்ளானமை தெரிந்ததே, இதனையடுத்து புதிய சுற்றறிக்கையை வெளியிட கடந்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வெளியான சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கட்டாயம் சேலை மட்டுமே அணியவேண்டுமென கூறப்பட்டது. அதற்கு பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்தது. குறிப்பாக பர்தா அணியும் இஸ்லாமிய பெண்கள் சார்ந்து அதீத எதிர்ப்பு நிலவியது.

இதற்கமைவாகவே தற்பொழுது இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கக : 13/2019(I)
எனது இலக்கம்: EST-7/UNIFO/06/V
பொது நிருவாக, அனர்த்த முகாகைத்துவ
மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு 07
2019.06.26
அமைச்சுக்களின் செயலாளர்கள்
மாகாண பிரதேச செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்
அரச உத்தியோகத்தர்களின் உடை
1989.02.01 ஆம் திகதிய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கக 8/89க்கு மைலதிகமாக அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்புடையதாகும் வகையில் 2019.05.29 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கக 13/2019 இனை திருத்தம் செய்து அதற்குப் பதிலாக இச்சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு 2019.06.25 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2. 2019.04.29 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2121/1 மற்றும் 2019.05.13 ஆந் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2123/4 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடையங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளை உமக்கு கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் உத்தியோகத்தர்கள் கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
3. அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை தொடர்பில் பின்வரும் ஏற்பாடுககளப் பின்பற்றுதல் வேண்டும்.
I. அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தினுள் தமது அலுவலக வளாகத்திற்கு வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டையும் மேற்சட்டையும் அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சாரி அல்லது ஒசரி அல்லது அரச சேவையின் கெளரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான, கண்ணியமான உடையொன்றை அணிந்திருத்தல் வேண்டும். எப்போதும் உத்தியோகத்தர்களின் முகம் முழுமையாக (காதுகள் இரண்டையும் தவிர) திறந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குப் பாதிப்பில்லாத உடையாக அது அமைதல் வேண்டும்.
II. ஏற்கனவே சீருடை அல்லது சீருடைக்கான கொடுப்பனவுகள் பெறும் உத்தியோகத்தர்கள் தங்களது அனுமதியளிக்கப்பட்ட சீருடையில் கடமையில் ஈடுபடுதல் வேண்டும்.
உதாரணம் : சாரதி, அலுவலக உதவியாளர், கிராம உத்தியோகத்தர் போன்ற பதவிகள் வகிப்பவர்கள்
III. அரச சேவையில் பணிபுரிகின்ற பெண் உத்தியோகத்தர்கள் கர்ப்பகாலத்தில் பணிக்குச் சமூகமளிக்கும் போது வசதியானதும் பொருத்தமானதுமான உடையொன்றை அணிந்து சேவைக்கு வர முடியும்.
IV. ஏதேனும்  சமைய மரபுகளுக்கு இணங்க தமது உடைகளை  அமைத்துக் கொண்டுள்ள உத்தியோகத்தர்கள் யாரும் இருப்பின், அவர்கள் மேலே I இல் உள்ளவாறான உடையை அணிந்து அதன் பின்னர் அந்த சமய அடையாளத்கத உறுதிப்படுத்தும் விதத்திலும் உத்தியோகத்தர்களால் முகத்தை (காதுகள் இரண்டையும் தவிர) தெளிவாக அடையாளம் காணக்கூடிய விதத்திலும்
மேலதிக அணிகலன் ஒன்றைப் பயன்படுத்த முடியும்.
4. சேவை பெறுவோராக அரசாங்கத்துக்குச் சொந்தமான வளவுகளுக்குள் நுழையும் போது அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளைப் பெறுவதற்கு வருகை தரும் போது ஒவ்வொரு ஆளும் தம்மை தெளிவாக அடையாளம் காட்டக் கூடிய முறையிலான ஆடையொன்றை அணிந்து வர வேண்டும் என்று ஏற்பாடுகள் விதிப்பதற்கு அனைத்து நிறுவனங்களினதும் தகலவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
05. 1989.02.01 ஆம் திகதிய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 8/89 தொடர்ந்தும் பசல்லுபடியாகும்.

ஒப்பம்./ ஜே. ஜே. ரத்னசிறி
செயலாளர்
பொது நிருவாக, அனர்த்த முகாகைத்துவ மற்றும்

கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top