ஏன்? எதற்காக தேரர் அழுகின்றார்?
கிழக்கு மாகாணத்தின் படித்த தமிழர்கள்
சிந்திக்க வேண்டிய தருணமிது.



கல்முனை தமிழ் பிரிவு போராட்டத்தில் பெளத்த தேரர்கள் கலந்து கொண்டதன் மர்மம் என்ன..?

அங்கு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டமுதுமானி சுமந்திரன் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் துரத்தப்பட்டதன் காரணம் என்ன..?

அவர்களை போகச்சொல்லுங்கள் அல்லது முஸ்லிமாகச் சொல்லுங்கள் என்று தேரருடன் சேர்ந்து கோசம் போட்டதன் அர்த்தம் என்ன..?

இது பிரதேச செயலகம் தரமுயர்த்தும் உண்ணாவிரதமா..?

அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பை கல்முனையில் இல்லாமல் செய்யும் போராட்டமா,,?

அல்லது தமிழ் முஸ்லிம் உறவுகளில் விரிசலை உருவாக்கி அதன் மூலம் இலாபம் அடைய நினைக்கிறார்களா..?

அழுது புலம்பி தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பீக்களை துரத்துங்கள் என்று தேரர் சொல்லும் காரணம் என்ன..?

அல்லது தேரரின் கட்டுப்பாட்டில் தமிழ் பிரிவை வழி நடாத்த முற்படுகிறாரா..?

சிந்திக்க வேண்டியது புத்தியுள்ள தமிழ் மக்கள்.

கல்முனை போராட்டக் களத்திற்கு வந்த அமைச்சர்களை விரட்டி அடித்ததாக பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் செய்திகள் உலவுகின்றன.

அமைச்சர்கள் மனோ கணேசன் - தயா கமகே மற்றும் சுமந்திரன் எம்பி ஆகியோர் விரட்டப்பட்டதாக புளகாங்கிதம் வேறு சிலருக்கு..

ஒரு அரசின் பிரதிநிதிகள் சந்திக்க வரும்போது உங்கள் உள்வீட்டு அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களுடன் பேசியிருக்கலாம்..

அவர்கள் கொண்டுவந்த யோசனைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றால் அவற்றை புறந்தள்ளி உண்ணாவிரதத்தை தொடர்ந்திருக்கலாம்.

எல்லாவற்றையும் விடுத்து... மேல் பார்த்து எச்சில் உமிழ்ந்தது போல நடந்துகொண்டு யாரோ ஒரு உள்ளூர் அரசியல் பின்னணியில் செயற்பட்டு நடந்து கொண்டிருக்கிறது கல்முனை தமிழ்ச் சமூகம்...

உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் கூறியிருந்தால் அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் மனோவும் தயாவும் பேசியிருப்பார்கள்.. மறுபக்கம் தமிழரசுக் கட்சியும் இனமுறுகல் இல்லாமல் நிதானமாக இந்த விடயத்தை கையாண்டிருக்கும்.

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் கல்முனை தமிழ் மைந்தர்கள் யோசியுங்கள்...!



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top