சட்டம் ஒரு
இருட்டறை அல்ல
மசாஹினாவை அரவணைத்த நீதிதேவதை!
மஹியங்கனை
ஹசலக
பொலிஸாரினால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக
தடுத்து வைக்கப்பட்டமையால்
சகோதரி மசாஹினாவின்
அடிப்படை உரிமை
மீறப்பட்டமைக்கு எதிராக FAST & FIRST TEAM யினால்
தொடுக்கப்பட்ட வழக்கு இன்றைய தினம் (28/06/2019) உயர்நீதிமன்ற நீதியரசர்கள்
B.P.அலுவிகார ,பிரசன்ன S.ஜெயவர்தன மற்றும் முர்து
N.B.பெர்னன்டோ முன்னிலையில் முதன் முதலாக விளக்கத்திற்கு
எடுக்கப்பட்டது.
சட்டத்தரணிகளினால்
"மசாஹினாவின் அடிப்படையுரிமை எவ்வாறு
மீறப்பட்டது" என்பதை நீதியரசர்களுக்கு
விளங்கப்படுத்தப்பட்டபோது மசாஹினாவின் அடிப்படையுரிமை
உண்மையில் மீறப்பட்டதென
ஏகமனதாக மூன்று
நீதியரசர்களால் ஏற்றுக்கொண்டதுடன் சட்டமா அதிபர் திணைக்களம்
சார்பாக தோன்றிய
அரச சட்டவாதியை
எதிர்வாதங்கள் ஏதாவது இருப்பின் எதிர்வரும் தினத்தில்
முற்போடுமாறு கூறியதுடன் எதிர் வரும் 07/02/2020 க்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட
மசாஹிமாவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிJ.C.வெலியமுன,
சட்டத்தரணிகளான புலஷ்திஹேவாமன்ன
,A.M.M.சறூக்,நுஷ்ரா சறூக்,இர்பானா
இம்ரான் மற்றும்
நளனி இளங்கோன்
மன்றில் ஆஜரானார்கள்.
0 comments:
Post a Comment