ஜா – எல பகுதியில் அமைந்துள்ள
பள்ளிவாசலை உடன் அகற்றுமாறு கோரிக்கை!
ஜா
– எல, ஏக்கல,
கம்பஹா வீதியில்
அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான
பள்ளிவாசலை, உடன் அங்கிருந்து அகற்றுமாறு கோரி
மகஜர் ஒன்று
கையளிக்கப்பட்டுள்ளது.
ஏக்கல
மக்கள் ஒற்றுமை
அமைப்பின் ஊடாக,
ஜா – எல
பிரதேச செயலகம்
மற்றும் ஜா
– எல பொலிஸ்
நிலையம் ஆகியவற்றிட்கு
இந்த மகஜர்
கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில்
2000க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக
கொழும்பு ஊடகம்
ஒன்று வெளியிட்டுள்ள
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏக்கல
ஸ்ரீ வாலுகாராம
புராண விகாரையின்
பிரதானி நாரம்பனாவே
விமலஜோதி தேரர்
மற்றும் கொட்டுகொடை
புனித கைதானு
ஆலய பரிபாலகர்
சிறியானந்த பெர்னாண்டோ ஆகியோரை முன்னிலைப்படுத்தி, இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த
பகுதியில் தடை
செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான தேசிய தெளஹீத்
ஜமாஅத்துக்குச் சொந்தமான பள்ளிவாசல் ஏக்கல பிரதேசத்தில்
அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்,
குறித்த பள்ளியினை
அங்கிருந்து உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜா
– எல, ஏக்கல
ஆகிய பிரதேசங்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், பயங்கரவாத
செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்தும்
தம்மைக் காப்பாற்றுமாறு
வேண்டியுமே குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.