பொதுபலசேனா கண்டியில் நடத்தவுள்ள
மிகப்பிரமாண்டமான மாநாட்டில்
நிறைவேற்றப்படவுள்ள மிக முக்கிய தீர்மானம்!
பொதுபலசேனா
கண்டியில் நடத்தவுள்ள
மிகப்பிரமாண்டமான மாநாட்டில் இஸ்லாமிய அடிப்டைவாதத்துக்கு எதிராக அதாவது முஸ்லிம் மக்களின்
ஆடை விவகாரம் , ஹலால் , மத்ரஷா , காதிக்கோர்ட் சட்டம் மற்றும் தௌஹீத் பள்ளிவாசல்கள்
உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அரசாங்கத்திடம்
கையளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல
சேனா அமைப்பின்
ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம்
திகதி ஞாயிற்றுக்கிழமை
கண்டி - தலதா
மாளிகை திடலில்
பிக்குகள் மாநாடு
இடம்பெறவுள்ளது.
இதில்
சுமார் ஒரு
இலட்சம் பொது
மக்கள் மற்றும்
10 ஆயிரம் பிக்குகள்
கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் இஸ்லாமிய
அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவும் அனைத்து இன மக்களையும்
ஒரு சட்டத்துக்கு
கீழ் கொண்டு
வருவதுமே இந்த
மாநாட்டின் முக்கிய விடயமென பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
முஸ்லிம்
மக்களின் ஆடை
விவகாரம் , ஹலால் , மத்ரஷா , காதிக்கோர்ட் சட்டம்
மற்றும் தௌஹீத்
பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிராக
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு
அரசாங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment