அரச அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள்
அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து செல்ல
அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபம்



அரச அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை அடுத்து முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் அணி தடை விதிக்கப்பட்டது.

நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையினால் பல்வேறு நெருக்கடி நிலைகள் ஏற்பட்டிருந்தன.

இதன் காரணமாக பாடசாலைகள், அரச நிறுவனங்களில் பணி புரியும் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டதுடன், சிலர் தமது வேலைகளையும் ராஜினாமா செய்திருந்தனர்.

புதிய சுற்றுநிருபத்தின்படி சேலை மற்றும் ஒசாரி தவிர, பெண் ஊழியர்கள் முகத்தை மறைக்காத வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகக் கருதப்படும் எந்தவொரு ஆடைகளையும் அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று பொது நிர்வாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, பெண் ஊழியர்களுக்கு சேலை அல்லது ஒசாரி கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கும் புதிய சுற்றுநிரூபத்தை வெளியிடுமாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top