முஸ்லிம் கடைகளை
பகிஸ்கரிக்குமாறு
தேரர் சிங்கள
மக்களுக்கு வழங்கிய உபதேசத்தை
பெரிதாக பொருட்படுத்தத்
தேவையில்லை
என்கிறார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
முஸ்லிம்
கடைகளை பகிஸ்கரிக்குமாறு
அஸ்கிரியப்பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன
தேரர் சிங்கள
மக்களுக்கு வழங்கிய உபதேசத்தை பெரிதாக பொருட்படுத்தத்
தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தெரிவித்திருக்கின்றார்.
அஸ்கிரிய
மகாநாயக்கர் தெரிவித்த கூற்றுக்கள் போல் காலத்துக்கு
காலம் சில
அறிவிப்புக்கள் வெளிவருது சகஜமானது என்று தெரிவித்துள்ள
ஜனாதிபதி, இவ்வாறான
கூற்றுக்கள் சமூகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது
என்றும் நேற்றைய
தினம் ஊடகவியலாளர்களை
சந்தித்த போது
தெரிவித்திருக்கின்றார்.
உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டு
இலத்திரனியல், அச்சு ஊடகங்களின் பிரதானிகள் மற்றும்
ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி
மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அஸ்கிரிய
பீட மகாநாயக்கரால்
வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள்
மற்றும் வென்னப்புவ
பிரதேச சபை
தலைவரின் முஸ்லிம்
வியாபாரிகளுக்கு எதிரான அறிவிப்பு ஆகியவற்றுக்கு எதிராக
சட்ட நடவடிக்கை
எடுப்பது குறித்து
எந்த கருத்தையும்
வெளியிடாத சிறிலங்கா
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன, இவ்வாறான
அறிவிப்புக்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை
என்று கூறியுள்ளார்.
‘இதுபோன்ற
அறிவிப்புக்கள் காலத்துக்குக் காலம் வரும். நினைவிருக்கின்றதா
ஒருகாலத்தில் இந்தியப் பொருட்களை கொள்வனவு செய்ய
வேண்டாம் என்ற
அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. அவ்வாறு காலத்துக்குக் காலம்
ஒவ்வொரு அறிவிப்புக்கள்
வெளியிடப்படும். அவை நிலைத்திருக்காது. பொதுமக்களுக்கு ஒரு
பொருளை கொள்வனவு
செய்ய தேவையேற்பட்டால்
அந்தப் பொருள்
இருக்கின்ற கடைக்குச் சென்று இது முஸ்லிம்களின்
கடையா என்று
பார்க்கமாட்டார்கள். தேவையிருந்தால் கொள்வனவு
செய்வார்கள்.
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு காலத்தில்
வெளியிடுகின்ற கருத்துக்களாகும். அவை நிலைத்திருக்காது. வெற்றியும் அளிக்காது. அவற்றை கணக்கில்
எடுக்க வேண்டாம்”என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment