இராணுவ ரீதியான
மனநிலையை கொண்டு
தன்னிச்சையாகயாக
செயற்படக் கூடிய
கோத்தபாயவின் ஆட்சியில்
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடமில்லை
கோத்தபாய
ராஜபக்ச ஏதோ
ஒருவகையில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால்,
நாடு எப்படியான
நிலைமையை எதிர்நோக்கும்
என்பதை அவரை
சுற்றியுள்ளவர்களை வைத்து தற்போதே
கணித்துவிட முடியும் என சிங்கள இணையத்தளம்
ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை
சிங்கள பௌத்த
நாடாக மாற்றக்
கூடிய இயலுமை
இருக்கும் ஒரே
நபர் கோத்தபாய
ராஜபக்ச என
பேராசிரியர் நளின் டி சில்வா அண்மையில்
நடைபெற்ற செய்தியாளர்
சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
சிறுபான்மை
இன மக்களின்
வாக்குகளுக்கு பின்னால் செல்லும் மகிந்தவுக்கோ அல்லது
பசில் ராஜபக்சவுக்கோ
அதனை செய்ய
முடியாது எனவும்
இலங்கை மீண்டும்
சிங்கள பௌத்த
நாடாக மாற்றுவது
கோத்தபாய ராஜபக்சவின்
கடமை எனவும்
அவர் தெரிவித்திருந்தார்.
இந்த
ஊடகவியலாளர் சந்திப்பில் சிங்கள பௌத்த தேசியவாத
கொள்கைகளை கொண்டுள்ள
பெங்கமுவே நாலக
தேரர், ஒமாரே
கஸ்ஸப தேரர்
ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
பேராசிரியர்
நளின் டி
சில்வா, கோத்தபாய
ராஜபக்சவிடம் சிங்கள பௌத்த நாட்டை கோருகிறார்
என்பதும், இந்த
பௌத்த சிங்கள
ஆட்சியில் தமிழ்,
முஸ்லிம் மக்களுக்கு
இடமில்லை என்பது
தற்போது தெளிவாகியுள்ளது.
அதேவேளை
முஸ்லிம் சிறார்களின்
எண்ணிக்கை அதிகரித்து
வருவதாகவும் எதிர்காலத்தில் அது சிங்கள சிறார்களின்
எண்ணிக்கை விட
அதிகரிக்கும் எனவும் கோத்தபாய ராஜபக்ச அணியை
சேர்ந்த உதய
கம்மன்பில அண்மையில்
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு
சிங்கள பௌத்த
அடிப்படைவாதிகள் கோத்தபாய ராஜபக்சவை சூழ்ந்து வரும்
வேளையில், கோத்தபாய
ராஜபக்ச, முன்னாள்
இராணுவ அதிகாரிகளுடன்
அதிகமாக பழகி
வருகிறார்.
அத்துடன்
அவர் இராணுவ
ரீதியான மனநிலையை
கொண்டுள்ளவர். தன்னிச்சையாகயாக செயற்படக் கூடியவர். அதிகார
மனநிலை கொண்டவர்.
இதனால், கோத்தபாய
ராஜபக்ச அடிப்படைவாத,
இராணுவ, அதிகாரவாத
மற்றும் சிங்கள
பௌத்த ஆட்சியாளராக
இருப்பாரே அன்றி
அவரிடம் வேறு
எதனையும் எதிர்பார்க்க
முடியாது.
எது
எப்படி இருந்த
போதிலும் இந்த
சகல அடிப்படைவாதிகளும்
இணைந்து ஜனாதிபதித்
தேர்தலில் கோத்தபாய
ராஜபக்சவை தோல்வியை
நோக்கி செல்கின்றனர்
என்பது வெளிப்படையானது
எனவும் அந்த
சிங்கள இணையத்தளம்
குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment