சந்தேகத்தை தூண்டும் பல
ஆபத்தான பொருட்களுடன்
கைதான மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ்
முன்னாள் உறுப்பினர் ஷாபி
ரஹீம் வெளியில் வந்தார்
கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் ஷாபி
ரஹீம் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இவரை
நீர்கொழும்பு நீதிமன்றத்தில் பிரதான நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் நேற்று
ஆஜர்படுத்தப்பட்ட போது 30,000 ரூபா ரொக்கப்
பிணையிலும் 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்
பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.
சந்தேக
நபருக்கு பிணை நிற்பவர்கள் அவருக்கு நெருங்கிய இரத்த உறவாக இருக்க வேண்டும்
என்றும், பிணையில் விடுதலை செய்யப்படுபவர்
வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும், வாரத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 9 மணிக்கும் 12 மணிக்கும்
இடையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டுமென்றும் பிரதான
நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய உத்தரவிட்டார்.
கடந்த மே
மாதம் 7ஆம் திகதி நீர்கொழும்பு பெரியமுல்லையில்
விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொது மக்கள் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட,
முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தொடர்பாடலை இடையூறு
செய்யக்கூடிய இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் வாகனத்தின் வேகத்தைக் கணிக்க முடியாமல்
செய்யும் சாதனங்கள் ஆகியவற்றுடன் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம்
கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment