இது 3 வருடங்களுக்கு முன்...........

அமைச்சரவையில் எமது குரல்கள் அடக்கப்படுகின்றன
மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக செயற்பட்ட நாம்
இன்று வேறு சிக்கலில் மாட்டியிருக்கிறோம்

- அமைச்சர் ரவூப்ஹக்கீம்



சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­­ளுக்கு அநீதிஇழைக்க இட­­ளிக்­கப்­­­ மாட்­டாது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தபோதிலும் எமது ஆலோ­­னை­­ளை நிரா­­ரித்துவர்த்­­மானி அறி­வித்­தலை வெளி­யிட்­டிருப்­பதன்மூலம் அவர் எமக்கு அநீ­தி­யி­ழைத்­து ­விட்டார்என்று அமைச்­சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்றுபாராளுமன்றத்தில் குற்றம் சுமத்­தினார்.
அமைச்­­­வையில் எமது குரல்கள் அடக்­­ப்ப­டு­கின்­றனபுதிய தேர்தல் முறை விட­யத்தில் சர்­வா­தி­கா­ரமும் தான் தோன்­றித்­­னமான போக்­குமேகடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் அவர்குறிப்பிட்டார்..
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இரண்­டா­வது நாளா­கவும் இடம்­பெற்ற புதிய தேர்தல்முறைமை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டுஉரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம் மேற்­கண்­­வாறு தெரி­வித்தார்.
ஜனா­தி­­தியோ பிர­­மரோ தங்­­ளது கட்­சி­களை பற்றி சிந்­திக்­கின்­­னரே தவிர சிறியசிறு­பான்மை கட்­சி­களைப் பற்றி சிந்­திக்­­வில்லைஇதே­நேரம் புதிய தேர்தல் முறையை நியா­யப்­­டுத்­து­­தற்கும் சிறு­பான்­மை­யி­னரின் கருத்­துக்­­ளையும் குறிப்­பாக என்­னையும் விமர்­சிப்­­தற்கு சிலஇலத்­தி­­னியல் ஊட­கங்கள் குத்­­கைக்கு அமர்த்­தப்­பட்­டது போன்று செயற்­­டு­கின்­றன.
பிர­­­ரி­னது கையா­ளாக நான் செயற்­­டு­­தாக விமர்­சிக்­கின்­றனர்குற்றம் சாட்­டு­கின்­றனர்அவ்­வாறு செயற்­­டு­­தற்­கான தேவை எனக்­கில்லைஅவர் மீதும் எனது விமர்­சனம் இருக்­கி­றது.இவ்­வி­டை­யத்தில் அவ­ரது நோக்கம் வேறு எனது நிலைப்­பாடு வேறு என்­பதை தெரி­வித்­துக் ­கொள்­கிறேன்.
சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சி­­ளுக்கு 20 வது திருத்தம் எந்­­­கை­யிலும் பாதிப்­பாக அமை­யாதுஎன்றும் சிறு­பான்மை மக்­­ளுக்கு புதிய தேர்தல் முறை­மையில் அநீ­தி­யி­ழைக்க இட­­ளிக்கமாட்டேன் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார்.
ஆனாலும் சிறு­பான்மை மற்றும் சிறு­கட்­சி­களின் ஆலோ­­னைகள் உள்­வாங்­கப்­­­வில்லைஎமதுநிலைப்­பா­டு­களை பரீ­சி­லிக்­கவும் இல்லைஎனினும் எமது கருத்­துக்­­ளையும் நிலைப்­பா­டு­­ளையும் இடதுசாரிகள் ஏற்­றுக் ­கொண்­டதை போன்று மாது­லு­வாவே சோபித்த தேரரும் ஏற்­றுக் ­கொண்­டுள்ளார்.
நான் அமைச்­­­வையில் இருப்­பதால் பிர­­மரின் கையா­ளாக செயற்­­டு­­தாக என்­மீது குற்றம்சுமத்தி விமர்­­னங்­களை முன்­வைக்­கின்­றனர்நான் அவ்­வாறு பிர­­மரின் கையா­ளாக செயற்­­­வேண்­டிய தேவை எனக்­கில்லை.
பிர­தமர் ரணில் விக்­கி­­­சிங்­கவின் இலக்கு வேறு எமது நிலைப்­பாடு வேறுஅவ­ரது நகர்­வுகள்குறித்து நான் அறிந்து வைத்­தி­ருக்­கிறேன்அத்­துடன் அவர் மீதும் எனக்கு விமர்­சனம் உள்­ளது.
பிர­­மரைப் பொறுத்­­­ரையில் அவ­ருக்கு அவ­ரது கட்­சியின் அதி­கா­ரத்தை தக்க வைத்­துக் ­கொள்­வதே பிர­தா­­மா­­தாகும்அதே­போன்று தான் ஜனா­தி­­தியும் செயற்­பட்டு வரு­கிறார்.
நாட்டின் ஏழு மாகா­­­களில் இருந்து போது­மான ஆச­னங்­களை பெற்று அடுத்த ஆட்­சியை கைப்­பற்றிக் கொள்­வதே இவர்­களின் பிர­தான இலக்­காக இருக்­கின்­றதுஇவ்­வாறு சிந்­திப்­­வர்­­ளுக்குவடக்கு கிழக்கு மக்கள் குறித்தோ சிறிய சிறு­பான்மைக் கட்­சிகள் குறித்தோ சிந்­­னை­யில்லை.
சிறிய சிறு­பான்மைக் கட்­சி­களால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைப்­பற்றி ஆராய்­­தற்கு தயா­ரில்­லாத நிலைமை காணப்­பட்­டதுஇது வரை­யி­லான காலப்­­கு­தி­களில் கொண்டு வரப்­பட்ட தேர்தல்மாற்­றங்­­ளின்­போது தற்­போது மாதி­ரி­யான சர்­வா­தி­கா­ரப்­போக்கு கடைப்­பி­டிக்­கப்­பட்­டதுகிடை­யாது.
இரட்­டை­வாக்குச் சீட்டு முறைமை உள்­ளிட்ட எமது யோச­னை­களை சகல தரப்­பி­­ரு­டனும் கலந்துபேசி அதன்­பின்னர் வர்த்­­மா­னியில் அறி­விக்க முடியும் என்ற யோச­னையை நாம் ஜனா­தி­­தி­யிடம்முன்­வைத்­தி­ருந்தோம்ஆனால் அது ஏற்­கப்­­­வில்லைசிறிய சிறு­பான்மைக் கட்­சி­­ளுக்கும் மக்­­ளுக்கும் அநீ­தி­யி­ழைக்­கப்­­­மாட்­டாது என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருந்த போதிலும் மேற்­படி20ஆவது திருத்தம் வர்த்­­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டதன் மூலம் ஜனா­தி­பதி சிறு­பான்மை மக்­­ளுக்கு அநீதி இழைத்து விட்டார்.
எனவே எமது ஆலோ­­னை­களை பெறாது பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்ள வர்த்­­மானி அறி­வித்தல் மீளப்­ பெ­றப்­­ வேண்டும்ஏனெனில் இத்­தி­ருத்­தத்தின் மீது எமக்கு எந்­­வி­­மான நம்பிக்கையும் கிடையாதுஇதேபோன்று தான் 19ஆவது திருத்ததிலும் எமது யோசனைகள் நிராகரிக்கப்பட்டிருந்தனஇந்த புதிய முறைதேர்தலானது  ர்த்தமற்றதாகும்.
இப்புதிய முறை தேர்தலானது வாக்களிப்பவர்களுக்கும் விளக்கமில்லாதுள்ளதுஅதேபோன்று சட்டவல்லுனர்களும் விளங்காதுள்ளதுவாக்காளன் என்பவன் தான் அளிக்கும் வாக்கு தொடர்பில்தெளிவுபெற்றிருப்பது மிகவும் அவசியமாகும்இதன் பெறுபேறுகள் எப்படியானதாக இருக்கும் என்றுதெரியாதுஅவ்வாறான தேர்தல் முறைமையொன்று இவ்வாறு அவசர அவசரமாக கொண்டு வருவதற்கானதேவை என்ன என்பதே எமது கேள்வியாகும்.
மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக செயற்பட்ட நாம் இன்று வேறு சிக்கலில் மாட்டியிருக்கிறோம்.
20 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிக்கலானதுஒரு கட்சிக்கு பெரும்பான்மை பலம்கிடைக்கும் வகையிலே இது தயாரிக்கப்பட்டுள்ளதுதொகுதி வாரி முறையின் கீழ் வாக்காளர்கள் சிறுகட்சிகளுக்கு வாக்களிப்பதில்லைதமது வாக்குகள் வீணாகும் என கருதி அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்உள்ளூராட்சி சபை மாகாண சபை மற்றும் பொதுத் தேர்தலுக்கு மூன்று வகையான தேர்தல் முறைஅறிமுகப்படுத்தப்பட்டால் வாக்காளர்கள் குழம்பிப்போவர்.
தாய்வான்நியூசிலாந்துஜேர்மனி போன்ற நாடுகளில் இரட்டை வாக்குச்சீட்டு முறை காணப்படுகிறதுவாக்காளர் எம்மை நிராகரித்தால் ஏற்கலாம்ஆனால் எமது கருத்துக்களை பாராளுமன்றத்தில்முன்வைக்கக்கூடிய வாய்ப்புக்கு இடையூறு செய்யாதீர்கள். இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top