முஸ்லிம் சமூகத்தின்
எதிர்பார்ப்புகள்
அடங்கிய முன்
மொழிவுகள்
பசில் ராஜபக்ஸவிடம்
உலமா கட்சி கையளிப்பு.
முஸ்லிம்கள்
சமகாலத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள்
அடங்கிய முன் மொழிவுகளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான
பசில் ராஜபக்ஸவிடம் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கையளித்தார்.
அமைக்கப்படவுள்ள
தமது அரசாங்கத்தில்
இனவாதம் தலையெடுக்க
ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
என பசில் ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார் .
பொதுஜன
பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்றையதினம் முஸ்லிம்
உலமா கட்சியுடன்
நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
அங்கு
பசில் ராஜபக்ஸ மேலும் தெரிவிக்கையில்
கடந்த
அரசாங்கத்தில் உள்ளூர் மட்டத்தில் ஏற்பட்ட இனகலவரங்களை
குறுகிய நேரத்தில்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்
அளவுக்கு தேசிய
பாதுகாப்பு பலமாக காணப்பட்டது.
குண்டு
தாக்குதல் குறித்த
அனைத்து தகவல்களும்
முழுமையாக கிடைக்கப்
பெற்றும் அரசாங்கம்
எவ்வித நடவடிக்கைகளையும்
முன்னெடுக்கவில்லை. இதற்கு அரசாங்கம்
முழுப் பொறுப்பேற்க
வேண்டும். ஆனால்
இன்று அரசாங்கம்
எதிர் தரப்பினர்
மீது இந்த
குற்றச்சாட்டை சுமத்துகின்றது.
அனைத்து
பிரஜைகளுக்கும் பொதுவான சட்டம் காணப்பட வேண்டும்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமை வலுப்பெற
வேண்டுமாயின் அனைவரும் பொதுச் சட்டத்துக்கு கட்டுப்பட
வேண்டும். சட்டம்
அனைவருக்கும் பொதுவாக காணப்படாத பட்சத்தில்தான் பிரச்சினைகள்
தோற்றம் பெறும்.
இதற்கு ஒருபோதும்
இடமளிக்க முடியாது..
ஒரு
சில முஸ்லிம்கள்
தவறான தீர்மானங்களை
கொண்டு செயற்பட்டமைக்காக
ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் குறை கூறமுடியாது.
தற்போதைய நிலைமையினை
அனைவரும் ஒன்றிணைந்தே
வெற்றி கொள்ளவேண்டும்
எனத் தெரிவித்துள்ளார்.
கட்சியின்
இணைச்செயலாளர் சி எம் வை இஸ்ஸதீன், உதவி செயலாளர் பொறியியலாளர் இஸ்ஸதீன் உட்பட
பொது ஜன பெரமுனவின் பிரமுகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment