குருணாகல்
டாக்டர் ஷாபிக்கு சாதகமான வழக்கு!
கொதித்தெழுந்த அதுரலிய ரத்ன தேரர்!
குருணாகல்
டாக்டர் ஷாபி
தொடர்பான விசாரணைகளை
சர்வதேச மட்டத்திற்கு
கொண்டு செல்வோம்
என நாடாளுமன்ற
உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
குருணாகல்
நீதிமன்றத்தில் டாக்டர் ஷாபி தொடர்பான வழக்கு
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற
உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில்
இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காகவே
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்படுகின்றதாக விஷேட டாக்டர்
தன்னிடம் குறிப்பிட்டதாக
சி.ஐ.டியின் சமூக
கொள்ளை தொடர்பிலான
விசாரணைப் பிரிவின்
உதவிப் பொலிஸ்
அத்தியட்சகர் திசேரா மன்றில் தெரிவித்தார்.
இதனால்
ஒட்டுமொத்த சி.ஐ.டி மீதான
நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது.முரண்பாடான கருத்துக்களினால்
சி.ஐ.டியின் மீதான
நம்பிக்கை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.டியின்
உயர் அதிகாரிகள்
முதலில் இவர்
மீது விசாரணைகளை
முன்னெடுக்க வேண்டும்.
இவ்விவகாரத்தை
சர்வதேச மட்டத்திற்கு
கொண்டு செல்வோம்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பிரதான வைத்திய
பிரிவு இவ்விடயம்
தொடர்பில் ஆராய்வதற்கு
இணக்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த
வாரம் இந்தியாவிலுள்ள
சிறப்பு வைத்திய
நிபுணர்களை இலங்கைக்கு வரவழைத்து சுயாதீன பரிசீலனைகள்
இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை
டாக்டர் ஷாபி
ஷிஹாப்தீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்தவித ஆதாரமுமில்லை என
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட
குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி
நிஷாந்த சில்வா
நீதிமன்றத்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
0 comments:
Post a Comment