மனிதனால் தீர்த்துவைக்க
முடியாத விடயத்தை
கடவுள் தீர்த்து
வைக்க வேண்டும்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை
தரமுயத்தக்கோரி கதிர்காமத்தை
நோக்கி
ஆண்மிகப் பயணம்
மனிதனால்
தீர்த்துவைக்க முடியாத விடயத்தை கடவுள் தீர்த்து
வைக்க வேண்டும்
என்ற உள்கருத்தை
வலியுறுத்தி கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை
தரமுயத்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தை
மேற்கொண்டிருந்த உண்ணாவிரதிகளுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் தலைவர் கி.லிங்கேஸ்வரன்
தலைமையில் இன்று (28) பிற்பகல் வடக்கு பிரதேச செயலக முன்பாக கதிர்காமத்தை நோக்கிய ஆண்மிகப்
பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
மனிதனால்
தீர்த்துவைக்க முடியாத விடயத்தை
கடவுள் தீர்த்து
வைக்க வேண்டும்
என்ற உள்கருத்தை
வலியுறுத்தி இப் பாதையாத்திரை முன்னெடுப்படுவதாக யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது
கேள்விக்குறியாகியுள்ள கிழக்கு தமிழர்களின்
இருப்பை வலியுறுத்தி
முற்போக்கு தமிழர் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற
உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் யாத்திரிகள் வழியனுப்பும்
வைபவத்தில் கலந்து கொண்டிருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.