முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்து!
அஸ்கிரிய பீட மகாநாயக்கர்
என்ன சொல்கின்றார்?
எமக்கு
அரசாங்கத்தின் மீதோ, முஸ்லிம் மக்கள் மீதோ
எந்த கோபமும்
கிடையாது. நாட்டில்
அனைத்து சமூகத்தினரும்
ஒற்றுமையாக வாழ வேண்டும் என அஸ்கிரிய
பீட மகாநாயக்கர்
வரகாகொட ஸ்ரீ
ஞானரத்ன தேரர்
தெரிவித்துள்ளார்.
தான்
முஸ்லிம் மக்களுக்கு
எதிராக கருத்துக்களை
தெரிவித்ததாக வெளியாகிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக
அவர் விடுத்த
விஷேட அறிவிப்பிலேயே
இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்த்த
ஞாயிறு குண்டு
தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து
அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை
முன்னெடுக்காவிட்டால் அரசாங்கம் மக்களின்
அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்
என்பதில் சந்தேகமில்லை.
அண்மையில்
என்னால் சொல்லப்பட்ட
போதனையை சிலர்
தவறாகப் புரிந்து
கொண்டு முரண்பட்ட
கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அதன் போது நான்
ஐக்கிய தேசிய
கட்சி குறித்தும்,
முஸ்லிம் மக்கள்
குறித்தும் கூறிய விடயங்கள் மக்கள் மத்தியில்
அதிகம் பேசுபொருளாகியுள்ளன.
எமக்கு
அரசாங்கத்தின் மீதோ, முஸ்லிம் மக்கள் மீதோ
எந்த கோபமும்
கிடையாது. நாட்டில்
சிங்கள, தமிழ்
மற்றும் முஸ்லிம்
மக்கள் நீண்ட
காலமாக ஒற்றுமையாக
வாழ்ந்து வந்தனர்.
எதிர்காலத்திலும் இதே போன்று அனைவரும் ஒற்றுமையுடன்
வாழ வேண்டும்
என்பதே எமது
எதிர்பார்ப்பாகும். இதற்கான உரிய
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்
எனவும் தேரர்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.