வசந்தம் தொலைக்காட்சி
முகாமைத்துவத்திற்கு*****
- வாங்க பழகலாம்
வசந்தம்
தொலைக்காட்சி இன்று தனது 10 வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. அதன் நடுநிலையான
சிறந்த சேவைக்கு எவராலும் பாராட்டு தெரிவிக்காமல் இருக்கமுடியாது. நாமும் அதன்
சிறப்பான நடுமிலையான சேவைக்கு பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.
இருந்தும் அந்த
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை 7.00 மணி தொடக்கம் ஒரு
மணித்தியாலம் இடம்பெறும் வாங்க பழகலாம் நிகழ்ச்சி குறித்து படித்த, பண்புள்ள
நேயர்களின் கருத்துக்களை இந்நாளில் அதன் முகாமைத்துவத்திற்கு தெரியப்படுத்த
வேண்டிய கடமைப்பாட்டோடு இதனை பதிவிடுகின்றோம்.
வாங்க பழகலாம்
நிகழ்ச்சி நாகரிகமான முறையில்
கருத்துக்களை மக்கள் முன் வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இல்லை. இவர்களின்
பேச்சுக்கள், நடிப்புக்கள் இளம் வயதினரை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில்
அமைந்துள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான
நடிப்புக்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் அதனோடு தொடர்புடைய பேச்சுக்களும்
நடிப்புக்களும் அநாகரிகமான முறையில் பொது இடத்தில் சிறுவர்கள் முன்னிலையில் பேச
முடியாதவைகளாகவும் நடித்துக்காட்ட முடியாதவைகளாகவும் உள்ளதாக நேயர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சி
ஒரு சில நிமிடங்கள் சிரிப்பாக இருந்தாலும் எமது இளம் பிள்ளைகளின் ஒழுக்கத்திற்கு
கேடாக மாறலாம் என்பதை முகாமைத்துவம் கவனத்தில் கொள்ள வேண்டும்..
இது விடயத்தில்
வசந்தம் தொலைக்காட்சியின் முகாமைத்துவம் கவனம் செலுத்துதல் அவசியம் என நேயர்கள்
வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதோ
பாருங்கள் வசந்தம் தொலைக்காட்சியின்
முகநூலில் வாங்க பழகலாம் நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம்,
கள்ளக்காதலியோடு ஓடிய கணவர்
வெட்டிக்கொலை !!!
வாங்க பழகலாம் இன்று இரவு 7 மணிக்கு
- மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.