வைத்தியரின் குற்றச்சாட்டை நிரூபித்துக்காட்டுங்கள்!
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறேன்
- அமைச்சர் ராஜித சேனாரத்ன சவால்



சர்ச்சைக்குரிய சத்திர சிகிச்சை வைத்தியர் சாபிக்கு எதிராகவுள்ளதாக குற்றச் சாட்டுக்களில் ஒன்றையேனும் நிரூபித்துக் காட்டினால் அவரின் கழுத்தைப் பிடித்து வெளியேற்றிக் காட்டுவேன் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சவால் விடுத்துள்ளார்.

வைத்தியர் சாபிக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்பவர்களுக்கு, அச்சுறுத்தல் விடுத்தவர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்களும், டீ..ஜிக்கள் மற்றும் ரத்ன தேரர் ஆகியோர்களே ஆவார்கள். நாம் அவருக்கு எதிராகவோ, ஆதரவாகவோ ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளேனா என்பதை முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சவால் விடுத்தார்.

சத்திர சிகிச்சை மருத்துவர் சாபி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அவருக்கு எதிராக பலர் முறைப்பாடுகளை தற்போதுவரை பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள வைத்தியர் சாபிக்கு எதிராக முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா? என தனியார் தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பியது.

இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர்,

வைத்தியர் சாபிக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்பவர்களுக்கு, அச்சுறுத்தல் விடுத்தவர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்களும், டீ..ஜிக்கள் மற்றும் ரத்ன தேரர் ஆகியோர்களே ஆவார்கள். நாம் அவருக்கு எதிராகவோ, ஆதரவாகவோ ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளேனா என்பதை முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்.

சர்ச்சைக்குரிய சத்திர சிகிச்சை வைத்தியர் சாபிக்கு எதிராகவுள்ளதாக குற்றச் சாட்டுக்களில் ஒன்றையேனும் நிரூபித்துக் காட்டினால் அவரின் கழுத்தைப் பிடித்து வெளியேற்றிக் காட்டுவேன் என்றார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top