கப்பம் கொடுக்க மறுத்த
முஸ்லிம் வர்த்தகர் குத்திக்
கொலை
- தெஹிவளையில் பரிதாபம் !
காலி வீதி
தெஹிவளையில் ஹார்ட்வெயார் நடத்தும் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கேட்டு அவர்
கொடுக்க மறுத்தபின் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் நேற்று
பிற்பகல் நடந்துள்ளது.
பிற்பகல் மூன்று
மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.கத்தியால் குத்தப்பட்ட வர்த்தகர் ( அஸீஸ்
சுபியான் 60 வயது )களுபோவிலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில்
உயிரிழந்தார்.
இச் சம்பவம் -
தெஹிவளை வைத்திய வீதிக்கு அருகில் உள்ள காலி வீதியில் உள்ள ஜெயலங்கா ஹாட்வெயார்
உரிமையாளரான Sufiyan வயது 60 என்பவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (24 -பகல் 3மணிக்கு நடைபெற்றுள்ளது. தெஹிவளை பொலிஸார்
விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனா். Sufiyan களுபோவிலை வைத்தியசாலையில் கொண்டுசெல்லும்போதே இறந்துள்ளார். .
சம்பவம் நடைபெற்ற நேரத்திலேயே அவர் தனியே ஹாட்வெயாரில் இருந்துள்ளார். கப்பம் கேட்டவா் உடன் கத்தியால் அவரை
குத்திவிட்டு தப்பியோடியதாகவும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவா் கடையில்
உள் கதறியிருக்கின்றார். . அதன் பின்னரே அவரை வைத்தியசாலையில் கொண்டு
சென்றுள்ளனா். அந்தப் பெரிய ஹாட்வெயார் சீசீரீ கமராவோ உதவியாளரோ இல்லாமல் தனியாகவே
இவா் இக் கடையை கடந்த 35 வருடங்களாக நடாத்தி வந்துள்ளார்..
0 comments:
Post a Comment