அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தூக்கில் போடுமாறு வேண்டுகின்றார்

ராவணா பலயவின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்


காட்டிலுள்ள ஒரு யானைக் குட்டியை வைத்திருந்ததற்காக தேரர் ஒருவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். ஆனால் வில்பத்து வனத்தை அழித்து, 1000 யானைகளின் வாழ்க்கையை இல்லாமலாக்கிய அமைச்சர் ரிஷாத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. அவரை தூக்கில் போடுங்கள் என ராவணா பலயவின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேரர்களுக்காக பேசக்கூடிய புத்தசாசன அமைச்சு இந்த நாட்டில் இல்லை. குற்றங்களைக் காட்டிக் கொடுக்கும் போது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனைக் காட்டிக் கொடுப்பவர்களைத் தண்டிப்பது அல்ல முறை,

இந்த அரசாங்கத்தில் காட்டிலுள்ள ஒரு யானைக் குட்டியை வைத்திருந்ததற்காக தேரர் ஒருவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். ஆனால் வில்பத்து வனத்தை அழித்து, 1000 யானைகளின் வாழ்க்கையை இல்லாமலாக்கிய அமைச்சர் ரிஷாத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலில் அவரை தூக்கில் போடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top