ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாடு
அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட வெற்றி விழாவா?
மாவட்டத்திலுள்ள நடுநிலையாளர்கள் கேள்வி
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் கடந்த காலங்களில்
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத் நிலையில்
கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி
சனிக்கிழமை பாலமுனையில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில்
கரையோர மாவட்டம், நுரச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை தகுதியானவர்களுக்கு
பகிர்ந்தளித்தல், அம்பாறை மாவட்டத்தில் (அட்டாளைச்சேனைக்கு) தேசியப் பட்டியல்
விவகாரம், சாய்ந்தமருது பிர்தேச மக்களுக்கு தனியான உள்ளூராட்சி அலகு, அம்பாறை
மாவட்டத்திலுள்ள இளைஞர்கள், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள், ஒலுவில் பிரதேச மக்களின் பல் வேறுபட்ட பிரச்சினைகள் என்பன உட்பட வழங்கப்பட்ட
பல வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அரசியல்
அதிகாரத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாடு ஒன்றை நடத்த முன் வந்திருப்பது அம்பாறை
மாவட்டத்திலுள்ள மக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமும் உயர்பீடத்திலுள்ளவர்களும்
எந்த வகையில் கணித்து வைத்துள்ளார்கள் என்பதை சிந்திப்பவர்ளால் எளிதில் புரிந்து கொள்ள
முடியும் என மாவட்டத்திலுள்ள நடுநிலையாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட மக்களுக்கு பிரதேச ரீதியாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த தேசிய மாநாட்டை நடாத்தியிருந்தால் இது கட்சியின் வெற்றி
விழாவாக இருக்கும் எனக் கூரும் நடுநிலையாளர்கள்.
இம்மாநாடு மர்ஹும் அஷ்ரஃப் அவர்களினால் உருவாக்கப்பட்ட கட்சியின்
மூலாக மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களாலும் தலைவரின் அன்பைப்
பெற்று தனக்கென்று ஒரு பதவியைப் பெறும் எண்ணத்தில் உள்ளவர்களாலும் இம்மாவட்ட மக்களைப்
“பே” காட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்படும்
மாநாடாகும் எனவும் மாவட்டத்திலுள்ள நடுநிலையாளர்களால்
மேலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதோ கட்சியின் தேசிய மாநாட்டுக்காக கட்சியினால்
எடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்.
* பிரதேசங்களின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களா?
* மாவட்ட மக்களை குறிப்பாக இளைஞர்களை “பே” காட்டும் வேலைத்திட்டங்களா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு பாலமுனையில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டு
அதற்கான முன் நடவடிக்கைகளை கட்சியின் முக்கியஸ்தர்கள் பல வழிகளில் எடுத்து வருகின்றார்கள்.
இதன் முதல் நடவடிக்கையாக தேசிய மாநாடு
சிறப்பாக இடம்பெறுவதை
ஒழுங்கமைக்கும் நோக்கில், தேவையான முன்னாயத்தங்களை மேற்கொள்வது
தொடர்பாகவும், கட்சியின் இளைஞர் படையணி உறுப்பினர்களுக்கு
தெளிவுபடுத்தும் ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தேசிய
தலைவர் அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
தலைமையில் பாலமுனை
பொது விளையாட்டு
மைதானத்தில் நடைபெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.
பதில்
சுகாதார அமைச்சர்
பைஸல் காசிம்,
விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.
ஹரீஸ், கிழக்கு
மாகாண சுகாதார
அமைச்சர் நஸீர்,
மாகாணசபை உறுப்பினர்கள்,
உயர்பீட உறுப்பினர்கள்,
போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என
பலரும் இதில்
கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
இக்
கூட்டம் முடிவடைந்ததுடன்
இளைஞர் தொண்டர்
அணியினருக்கும் கட்சியின் பிரதி அமைச்சர்கள், மாகாண
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை
உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்குமிடையில்
சிநேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றும்
நடைபெற்ற்ள்ளது
ம்ற்றொரு அங்கமாக மறைந்த
பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.
அஸ்ரப் அவர்கள்
பிறந்த சம்மாந்துறையில்
“மரத்திற்கு மகுடம்
மண்ணிற்கு
மகிமை”
நிகழ்வு ஒன்றும் அல் மர்ஜான் மகளீர்
கல்லூரி மைதானத்தில்
நடைபெற்றது.
1986 - 1994 காலப்பகுதியின் மூத்த
போராளிகளுக்ம், 1986 - 2015 காலப்பகுதியின் வேட்பாளர்களுக்கான
மகுடம் சூடப்பட்டதுடன்
2014/2015, 2015/2016 ஆண்டுகளில் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற
உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்
தலைவர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள்
தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்
தலைவரும், நகர
திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
அவர்கள் பிரதம
அதிதியாக கலந்துகொண்டார்.
சம்மாந்துறையில் இடம்பெற்ற “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை தொடர்பாக சம்மாந்துறையைச் சேர்ந்த
Mohamed Hisham Mohamed Ashraf எனும் முகநூல் நண்பர் ஒருவர் பின்வரும் கருத்தை ஆதங்கமாக
வெளியிட்டுள்ளார்.
Mohamed
Hisham Mohamed Ashraf கள்ளன், காவாலி, கூட்டும். கூட்டிக் கொடுப்பார் அரங்கேற்றமும். வாள்போல் கூரான அந்த சஹீதுகள் அஷ்ரப், மன்சூர் அரவணைத்த போராளிகள் நாங்கள் ஓரத்தில் நின்று கொண்டு தர்க்கிக்காது கர்ச்சிக்காது கோமாளிக் குரங்குக் கூட்டத்தை பார்ப்போம் போராளிகளே!
உங்கள் வேதணைகள் இன்ஷாஅல்லாஹ் நாளை சாதித்த சாதணையாகும் போது.நிம்மதிப் பெருமூச்சிடும் எம் தாய்மண் துறையூர். அதுவரை நீ விளித்துக் கொண்டு துயில் வீரனே!!
0 comments:
Post a Comment