ஒலுவில் துறைமுகக் காணிச் சுவீகரிப்புக்கான

நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடு!.

அமைச்சர் ரவூப் ஹக்கீமை விழித்து சுவரொட்டிகள்!!


 ஒலுவில் துறைமுகப் பிரதேசத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமை விழித்து வாசகம்; எழுதப்பட்ட சுவரொட்டிகள் கடந்த சில தினங்களாக ஒட்டப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'அமைச்சர் ஹக்கீமே!
 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2016ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டுக்கு முன் ஒலுவில் துறைமுகக் காணிச் சுவீகரிப்புக்கான நட்டஈட்டை வழங் நடவடிக்கை எடு.
காணிகளை இழந்து தவிக்கும் ஒலுவில் மக்கள்'
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு, எதிர்வரும் 19ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்துக்குச் சமீபமாகவுள்ள பாலமுனைப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்காக ஒலுவில் கரையோரக் கிராமத்தைச் சேர்ந்த 48 குடியிருப்பாளர்களின் 63 ஏக்கர் காணித்துண்டுகள் 2008ஆம் ஆண்டு அரசினால் சுவீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் காணிகளை இழந்த 48 பேரில் 32 பேருக்கு காணி இழப்புக்கான மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களில் 20 பேருக்கே நட்டஈடு வழங்கப்பட்டது. இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டவர்களில் மேலும் 12 பேருக்கும் மதிப்பீடு செய்யப்படாத 16 பேருக்குமாக மொத்தம் 28 பேருக்கு இதுவரையில் நட்டஈடு வழங்கப்படவில்லையென ஒலுவில் துறைமுகத் திட்டத்தினால் காணி இழக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் எம்..பழிலுல்லாஹ் தெரிவித்துள்ளார்.  
'இந்தக் காணி சுவீகரிப்பின்போது காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு, தொழில் இழப்புக்கு கொடுப்பனவு, கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு, வீட்டு வளவுகளில் பன்புல் வளர்த்து தமது வாழ்வாதாரத்தைத் தேடியோருக்கு பன்புல் வளர்;க்க உதவுவோம் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஒட்டுமொத்தத்தில் இந்தத் துறைமுகத் திட்டம் இங்கு கொண்டுவரப்பட்டதால்  தமது  வசிப்பிடம், காணி, தொழில், வாழ்க்கையென  அனைத்தும்  பறிபோனது. அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் நாளுக்குநாள் எமது கிராமமும் அழியும் நிலைமை உருவாகியுள்ளது. தற்போதைய நல்லாட்சியில் தமது இழப்புக்களுக்கு ஒரு முடிவு வேண்டும்' என பாதிக்கப்பட்டோர்  மேலும் தெரிவித்துள்ளனர்.  இக்குறைபாடுகளுக்கு எங்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரல் வேண்டும் எனவும் அப்பிரதேச மக்கள் பல வருட காலமாக கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோன்று சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளூராட்சி மன்ற விடயம் தொடர்பாக இப்பிரதேசத்திற்கு தனியான சபை  ஒன்றை ஏற்படுத்துவதற்குகான கோரிக்கை, நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பாக வாழ்விடங்களை இழந்து இருக்கும் மக்களின் கோரிக்கை,  அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான தேசியப்பட்டியல் ஆசன வழங்கப்படல் வேண்டும் என்ற அப்பிரதேச மக்களின் பல வருடங்கள் கடந்த வலுவான கோரிக்கை, அம்பாறை மாவட்டத்திலுள்ள இளைஞர்கள்,யுவதிகளுக்குரிய வேலைவாய்ப்புக்களுக்கான கோரிக்கைகளையும் மக்கள் முன் வைத்துள்ளனர்.

ஆனால்,  இக்கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் செய்து கொண்டிருக்கின்றோம், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, நிதானமாகவும் அவசரப்படாமலும் கச்சிதமாகச் செய்ய வேண்டிய விடயம் நிச்சயம் செய்து கொடுப்போம், வழங்கிய வாக்குறுதியிற்கு அமைய அவை நடந்தேறும்; வாக்குறுதியளித்தபடி அதனை மேற்கொள்வதற்கு நாம் உறுதியாக உள்ளோம். அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றெல்லாம் வசனங்கள் பேசப்பட்டு மக்களுக்கு ஒரு வகை தற்காலிக உற்சாகம் வழகப்படுவதாகவும் மண்ணிற்கு மகுடம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படு மாநாட்டுக்கு ஆதரவு தேடப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top