யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்!

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதியை நோட்டமிட்ட ராணுவ போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியை நோட்டமிட்ட ராணுவ விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதை ராணுவ அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
ஹாமா பகுதியில் ராணுவ விமானம் தரையிறங்க வட்டமிடுகையில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என கூறியுள்ள ராணுவம்,
இது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிரியாவை கண்கணித்துவரும் மனித உரிமைகள் குழு இது குறித்து தெரிவிக்கையில் கிளர்ச்சியாளர்கள் வெப்பத்தை கண்டறிந்து தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
இதனிடையே அலெபோ நகரில் ராணுவ விமானம் தொடர் தாக்குதலை நடத்தி வருவதாகவே அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் தரைமட்டமான ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய ஒரு நபரை மீட்பு குழுவினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர்.
விமான தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள கட்டிட இடிபாடுகளிடையே அந்த மனிதர் புகுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் கிளர்ச்சியால் இதுவரை 250,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர், மில்லியன் கணக்கிலானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் தலையீட்டால் பேச்சு வார்த்தை தொடங்க உள்ள நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறும் நடவடிகையில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கண்காணிப்பு குழுவினர் குற்றம்சாட்டுகின்றன்றர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top