மஹிந்தவின் மாமியாரின்
இல்லத்தில் பொலிஸ் சோதனை!
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின்
பாரியார் ஷிரந்தி
ராஜபக்ஸவின்
பெற்றோரின் இல்லத்தில் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு
அதிகாரிகள் இன்று காலை சோதனையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தெஹிவளை
“நோலிமிட்“ காட்சியறைக்கு அருகில்
மிஹிந்து மாவத்தையில்
உள்ள இவரது
உத்தியோக பூர்வ
இல்லத்தையே இன்று காலை சோதனையிட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது..
ஒரு
காலகட்டத்தில் சேரிப்புறமாக விளங்கிய இந்த பகுதி
மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவுடன்
உப மின்
நிலையம் மற்றும்
அரச கட்டிடங்கள்
நிர்மாணிக்கப்பட்டு ஓரளவுக்கு அபிவிருத்தியடைந்த
பகுதியாக மாற்றப்பட்டிருந்தது.
பொலிஸ்
நிதிமோசடிப் பிரிவினர் இன்று விசாரணைகளுக்காக திடீர்
சோதனை நடவடிக்கை
மேற்கொண்ட போது
வீட்டின் ஒருபக்க
சுவரில் மேடம்
ஷிரந்தி விக்கிரமசிங்க
ராஜபக்ஸ என்ற பெயர்ப்பலகை
ஒன்றையும் காணக்
கூடியதாக இருந்தது.
அத்துடன்
குறித்த வீடு
புதிதாக புனர்நிர்மாணம்
செய்யப்படும் நிலையில் ஒருபகுதி நிர்மாணப் பணிகள்
முடிவடைந்துள்ளதுடன், மறுபகுதியின்
கட்டுமாணப் பணிகள் நடைபெறுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும்,
வீட்டில் நடைபெற்ற
சோதனை நடவடிக்கை
குறித்து, பொலிஸ்
நிதிமோசடிப் பிரிவினர் எந்த விதமான தகவல்களையும்
வெளியிடவில்லை.
அத்துடன்
மஹிந்த ராஜபக்ஸ
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர்
ஷிரந்தியின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பளிக்கும்
வகையில் குறித்த
இல்லத்தின் பின்புறமாக இராணுவ துணை முகாம்
ஒன்றையும் நிறுவியிருந்தார்.
ஒரு உப (சப்) டிவிசன் இராணுவத்தினர்
இன்றும் அங்கு
நிலைகொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment