வறட்சியால்  வாட்டி எடுக்கும் துபாயில் கன மழை

மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்
(படங்கள்)
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் பெய்த  கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஐக்கிய அரபு நாடுகளின் 7 பகுதிகளில்  கன மழை கொட்டியுள்ளது. துபாய் மற்றும் ஷார்ஜாவில் அதிகாலை 4 மணிக்கு இடி மற்றும் பலத்த காற்றுடன் கன மழை கொட்டத் தொடங்கியதாக அறிவிக்கப்படுகின்றது.
அபுதாபி, துபாயின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எப்போதும் கொடுமையான வெயிலும், வறட்சியும் வாட்டி எடுக்கும் துபாயில் கன மழையின் தாக்கத்தை பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர்
கடும் வெயிலைக் கூட தங்கிக் கொள்ளும் துபாயில், லேசான தூறல் மழையே அபூர்வம் என்ற நிலையில், கன மழை கொட்டியது.
சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். பல இடங்களில் மரங்கள் சாய்ந்திருப்பதாகவு கூறப்படுகிறது.


 7 மணி நேரத்தில் 253 சாலை விபத்துகள்!

துபாயில் பரவலாக மிகக் கன மழை முதல் மிதமான மழை வரை பெய்துள்ளது. கன மழை காரணமாக அந்நாட்டு நேரப்படி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான 7 மணி நேரத்தில் 253 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த 7 மணி நேரத்தில் 253 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், உதவி கேட்டு சுமார் 3,200 தொலைபேசி அழைப்புகள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top