உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்:
முதலிடத்தில் டென்மார்க்

உலக நாடுகளில் மிக அதிக மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் அதிகமாய் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை டென்மார்க் நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதுவரை முதலிடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து நாட்டை இரண்டாவது இடத்திற்கு தள்ளிக்கொண்டு டென்மார்க் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து மற்றும் நோர்வே(4), பின்லாந்து(5), கனடா(6), நெதர்லாந்து(7), நியூசிலாந்து(8), அவுஸ்திரேலியா(9), சுவீடன் 10 வது இடத்திலும் உள்ளது.
ஒட்டுமொத்தமாக 156 நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆப்கானிஸ்தான் 154 வது இடத்தை பிடித்துள்ளது. சிரியா 156 வது இடம்.
உலகின் வல்லரசு நாடுகளான ஜேர்மனி(16), பிரித்தானியா(23), ஜப்பான்(53), ரஷ்யா(56), சீனா(83) ஆகிய இடங்களிலும் அமெரிக்க 13 வது இடத்திலும் உள்ளது.
அரசியல் பொருளாதார சூழல்கள் காரணமாக கிரேக்கம், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இந்த முறை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளன.
இந்த பட்டியலில் சோமாலியா(76), சீனா(83), பாகிஸ்தான்(92), ஈரான்(105), பாலஸ்தீனம்(108) மற்றும் வங்காளதேசம்(110) உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.
இந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்என்ற சர்வேயையும் அடிப்படையாக கொண்டு, உலக அளவில் 158 நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு, மகிழ்ச்சிகரமான நாடுகளை .நா. சபையின் கீழ் இயங்குகிறசஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்வரிசைப்படுத்தி உள்ளது.

இதேவேளை, ,உலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா இடம் பெற்றிருக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top